கலைஞரின் சட்டமன்ற உரைகள்
ய
449
மற்றும் வனத்துறை 7.10.1998 நாளிட்ட கடிதத்தின் மூலம் சில விவரங்களை நம்மிடமிருந்து கோரியது. அந்த விவரங்கள் அனைத்தும் பெறப்பட்டு. தமிழ்நாடு அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத் துறையின் ஒப்புதலோடு 21-1-1999 அன்று மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறைக்கு அனுப்பப் பட்டுள்ளது. மீண்டும் நினைவூட்டுக் கடிதம் 22-2-1999 அன்றும் அனுப்பப்பட்டது. காமராஜர் மணிமண்டபம் கன்னியாகுமரி கடற்கரையில் அமைப்பது தொடர்பாக முழு விவரங்களும் பத்திரிகைகளுக்குச் செய்திக் குறிப்பாக 7-1-1999 அன்று, செய்தித் துறை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் பிறகு, 22-2-1999 அன்று மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறையின் இணை இயக்குநரிடமிருந்து வந்துள்ள பதிலில், "The under- signed is directed to refer to the above and inform you that the construction of the proposed Memorial in CRZ I area is not per- missible, as per the provisions of the CRZ Notification 1991 as amended from time to time. Therefore, we regret our inability to consider the proposal. You may identify a suitable site for the memorial in conformity with the provisions of the Notification". அதாவது அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பகுதி அறிவிக்கை 1991இல் உள்ள அம்சங்களின்படி, கடற்கரை ஒழுங்கு முறைப்படுத்தப் பட்ட பகுதி-1இல் கருதப்பட்டுள்ள நினைவகம் கட்டுவதற்கு அனுமதிப்பதற்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, கருத்துருவைப் பரிசீலனை செய்வதற்கு இயலவில்லை என்பதற்கு வருந்துகிறோம். அறிவிக்கையில் சொல்லப்பட்டுள்ள அம்சங்களுக்கேற்ப நினைவகம் அமைக்கத்தக்க இடத்தை தாங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த இடம் முடியாது; நாகர்கோவிலிலே, கன்னியாகுமரியிலே வேறு எங்காவது இடம் பாருங்கள்; அந்த இடம் முடியாது." எந்த இடம் வேண்டுமென்று அங்குள்ள காங்கிரஸ் நண்பர்களும் மற்ற தோழர்களும் போராடி வருகின்றார்களோ அந்த இடம் முடியாது என்று மத்திய அரசு இந்தக் கடிதம் மூலமாக அறிவித்தது இவ்வளவு நினைவூட்டுக் கடிதங்களுக்குப்