பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

நிதிநிலை அறிக்கை மீது

பிறகும். அது மாத்திரமல்ல; தில்லையாடி வள்ளியம்மைக்கு ஒரு தபால்தலை வெளியிட வேண்டுமென்று எழுதப்பட்ட கடிதத்திற்கு, 'அதுவும் முடியாது. மத்திய அரசின் அஞ்சல் துறை விதிமுறைகளில் பொருந்தி வரவில்லை என்று பதில் வந்துவிட்டது.' தில்லையாடி வள்ளியம்மாள் மத்திய அரசின் அஞ்சல் துறையினுடைய விதிமுறைகளிலே பொருந்தி வரவில்லையாம்! அதனால் இது முடியாது என்று எழுதி விட்டார்கள். பிறகு நான் 1-3-1999 அன்று பிரதமருக்கு, இந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று மறுபடியும் கடிதம் எழுதி இருந்தேன். அது போலவே, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களுக்கு அஞ்சல்தலை வெளியிட வேண்டுமென்றும் எழுதியிருந்தேன். ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் - தாடியில்லாத பெரியார் என்று அழைக்கப்பட்ட

եւ

அந்தக் காரணத்தினாலோ, என்னவோ அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. யார், யாருக்கோ அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. நான் யாரையும் இதனால் தாழ்த்தியோ, இறக்கியோ பேச விரும்பவில்லை. எல்லோருக்கும் வெளியிடலாம். ஆனால், ஓமந்தூராருக்கு வெளியிட, காந்தியடிகளோடு தென்னாப்பிரிக்கப் போராட்டத்திலே இணைந்து பாடுபட்ட தில்லையாடி வள்ளியம்மைக்குத் தபால்தலை வெளியிட, பெருந்தலைவர் காமராஜருக்கு கடற்கரை ஓரத்திலே மணிமண்டபம் எழுப்ப மத்திய அரசிடமிருந்து வந்துள்ள வந்துள்ள பதில்களைத்தான் உங்கள் முன்னிலையிலே நான் வைத்திருக்கிறேன். எனவே இது இந்த அரசினுடைய குற்றம் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

-

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம்பற்றிப் பேசும்போது, நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் அதை தொண்டமான் நினைவு மாளிகை என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது குறைந்த விலைக்கு வாங்கிவிட்டோம் என்று சொன்னார்கள். அப்போது 35 இலட்சம், 40 இலட்சம் என்றால், இப்போதுள்ள பண மதிப்பீட்டிற்கு அது எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியும். அதனால் மதிப்பைக் குறைத்து வாங்கிவிடவில்லை. இருவருக்கும் திருப்தியாகத்தான் அது வழங்கப்பட்டது. இடையில் நம்முடைய அருமை நண்பர்