பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

457

ரூ. 1,562 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தக் கணக்கைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். நடப்பு ஆண்டில் ஏற்கெனவே செலுத்தியவர்களுக்கு இந்தத் தொகை ஈடுசெய்யப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவற்றோடு பல திட்டங்களை அறிவித்தேன். நேற்றைய தினம் பொதுப்பணித்துறை அமைச்சர் என்னிடத்திலே பேசிக்கொண்டிருந்தபோது ஒன்றைச் சொன்னார். இந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ள தொகையில் 'டெண்டர்' விட்டதில் அதைவிடக் கொஞ்சம் குறைவான செலவுதான் தஞ்சை போன்ற இடங்களில், திருச்சி போன்ற இடங்களில் ஆகும் என்று தெரிகிறது. ரூ. 10, 12 கோடி மிச்சம் ஏற்படும் என்று தெரிகின்றது என்றார் என்றார். அப்படியானால் வேறு மாவட்டங்களுக்கு அதைத் திருப்பு என்று பொதுப்பணித் துறை அமைச்சரிடம் திருப்புங்கள் - என்று சொன்னேன். அவையிலே சொல்லக்கூடாது திருப்பு என்று. அதன்படி கீழ்பவானி ஆற்றுப் பாசனப் பகுதியிலே உள்ள பாசனக் கால்வாய்கள் நீண்ட காலமாக தூர் வாரப்படாமலும், பழுதடைந்து கட்டுமானப் பகுதிகள் சீர் செய்யப்படாமலும் இருப்பதால் கடைமடைக்கும் மற்றும் அதன் பாசனப் பகுதிகளுக்கும் போதிய நீர் கிடைக்கவில்லை. இக்குறையைப் போக்க வேண்டுமென்று திருமதி. சுப்புலட்சுமி செகதீசன் அவர்கள் நேற்றைய தினம் ஒரு மனுவைக் கொடுத்தார்கள். இந்த மிச்ச ரூபாயை என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்த போது அதற்கு ஒரு கிராக்கி வந்துவிட்டது. அதன்படி அந்தக் குறையைப் போக்க இந்த ஆண்டு முதல் தவணையாக ரூ. 10 கோடி அதற்காக ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதைப்போலவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங் களில் பாசனத்திற்குப் பயன்படும் தாமிரபரணி, குமரி மாவட்டத்திலே பாயும் கோதையாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளிலே உள்ள கால்வாய்களை இந்த ஆண்டே சீர் செய்து தூர் வாரித்தரப்பட வேண்டுமென்று பொதுப்பணித்துறை அமைச்சருக்கு வேண்டுகோளாக விடுத்திருக்கிறேன். அவர் எழுதிக் கொடுக்கும்போது 'உத்தரவிட்டிருக்கிறேன்' என்று