பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

நிதிநிலை அறிக்கை மீது

எதிர்க்கட்சித் தலைவர் எப்போதும் அவசரப்பட்டு பேசுகின்றவர் அல்ல. இருந்தாலும் கொஞ்சம் யோசித்து அவர் பேசியிருக்கலாம். இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால், 145 அடி கொடுக்கலாம் என்று மத்திய சர்க்காரே சொல்லி, அதனால் ஒன்றும் அந்த அணை கெட்டுப் போய்விடாது, அந்த அணை பலமாகத்தான் இருக்கிறது என்று சொல்லி, அந்த முடிவைக் கேரள அரசு ஏற்றுகொள்ளாத ஒரு சூழ்நிலை. அது நாயனாருடைய எண்ணம் என்றுகூட நான் சொல்லமாட்டேன். அங்குள்ள அரசியல் சூழ்நிலை. அண்டை மாநிலங்களோடு ஏற்படக்கூடிய உறவைக் கெடுப்பதே ஆங்காங்கு எழுகின்ற அரசியல் சூழ்நிலைகள்தான். அந்த வகையில் நாயனார் அவர்கள் எதையும் உடனடியாகச் சொல்ல இயலாத அளவுக்கு அரசியல் நெருக்கடி அவருக்கு அங்கே இருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

இதுபோன்ற நேரங்களில் உண்மை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்க வேண்டுமேயானால், ஒரு Baby dam கட்ட வேண்டுமென்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் அதுவும் தற்போது தடைப்பட்டிருக்கிறது. அதற்கும் சேர்த்துத்தான் இந்தப் பேச்சுவார்த்தை. baby dam கட்டினால்தான் 152 அடி தண்ணீரைத் தேக்க முடியும். இல்லாவிட்டால் முடியாது. 145 அடி வரை ஒத்துக்கொண்டு, baby dam கட்டிய பிறகு 152 அடி தண்ணீரைத் தேக்குவது என்கின்ற ஒரு சமரச நிலையும் அதிலே இருக்கின்றது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. பொத்தாம்பொதுவில், '152 அடி என்று வராவிட்டால் நீ நீ துரோகி' என்று (குறுக்கீடு) அவருக்கு ஆசை இருந்தால் சொல்லட்டும்.

திரு. சோ. பாலகிருஷ்ணன்: தயவுசெய்து முதலமைச்சர் அவர்களை, 'துரோகி' என்ற அந்த வார்த்தையை நான் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அப்படிச் சொல்லியிருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். நீங்கள் திரும்பும்போது 152 அடியோடு வர வேண்டுமென்று நான் வேண்டுகோள் வைக்கிறேன்.