பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

469

ரண்டு மாதங்களுக்கு முன்பே, போட வேண்டிய வரியை எல்லாம் போட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே, போட வேண்டிய வரியை எல்லாம் போட்டுவிட்டு” என்று நான் பேசியதை ஞானசேகரன் படிக்கும்போது சொல்லவில்லை, அதை மாத்திரம் விட்டு விட்டுப் படித்திருக்கிறார். "இந்த மன்றத்தினுடைய பெரும்பான்மையான ஒப்புதலையும் பெற்ற, அந்த வரிகள் இன்றையதினம் நடமாடிக்கொண்டிருக்கிற நேரத்தில், வரி இல்லாத ஒரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக ஒரு வாதத்தை ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுப்பிக் கொண்டிருப்பது உள்ளபடியே விந்தையாக இருக்கிறது. உடனே, அந்த நடவடிக்கைக் குறிப்பிலே கனம் பக்தவத்சலம் குறுக்கிட்டு, "மேலும் வரி இல்லை என்பதுதான் வாதம்" என்று சொல்கிறார். அப்போது நான் தொடர்ந்து பேசுகிறேன்.

8

“கலைஞர் மு. கருணாநிதி : மேலும் வரி இல்லையென்று முதலமைச்சர் அவர்கள் குறிப்பிடுகிறார். தோட்டா இல்லாத துப்பாக்கி என்று கூறுவதைப்போல்தான் 'மேலும் வரி இல்லை' என்று கூறுவது இருக்கிறது. தோட்டா இல்லாத துப்பாக்கி என்றால், தோட்டாவே போடப்படாத துப்பாக்கி என்ற பொருளும் அல்ல. இருந்த தோட்டாக்கள், ஏழை எளியவர்கள் என்ற புள்ளிமான்களை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டு, இப்போது தோட்டா இல்லாத காலித் துப்பாக்கியாகக் காட்டப்படுகிறது. மேலும் வரி இல்லை என்று கூறப்படுகிறது. இரண்டு திங்களுக்கு முன்பாக ஏறத்தாழ 8 கோடி ரூபாய்க்கு வரிகளைப் போட்டுவிட்டு, 'மேலும் வரி இல்லை' என்று தோட்டா இல்லாத துப்பாக்கி காட்டப்படுகிறது" என்று பேசியிருக்கிறேன். தோட்டா இல்லாத துப்பாக்கிதான் என்பதற்காக அதை எடுக்காமல் விட்டுவிட்டார் ஞானசேகரன். ஆனால், அந்த 8 கோடி ரூபாய் வரி என்பது 1966ல் போட்டபோது அது இப்போது கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் மதிப்பு என்பதை மறந்துவிடக் கூடாது - 1966ல் வருவாய்க் கணக்கில் மொத்த வருவாயே தமிழ்நாடு அரசாங்கத்திற்கு 170 கோடி ரூபாய்தான். அதிலே 8 கோடி ரூபாய் என்பது இன்றைய அளிவிலே கணக்குப் பார்த்தால் 800 கோடி ரூபாய் வரி அப்போது போடப்பட்டிருக்கிறது.