470
நிதிநிலை அறிக்கை மீது
இரண்டு மாதங்களுக்கு முன்பே வரி போட்டாகிவிட்டது அதைத்தான் நான் அன்றைக்குச் சொல்லி இருக்கிறேன்.
அதை எடுத்துக்காட்டிய அவர், நீங்கள் வரி போடவில்லையா என்றார். நாங்கள் போடவில்லையே, எங்கே போட்டோம்? உடனே, பேருந்துக் கட்டணம், சொத்து வரி என்று சொன்னார்கள். சொத்து வரி என்பது த.மா.கா.வும் ஆளுகிற உள்ளாட்சி மன்றங்களில் போடப்படுகிற வரியே தவிர, அது திராவிட முன்னேற்றக் கழக அரசு போடுகிற வரியல்ல. அது ஞானசேகரனுக்குத் தெரியும். இருந்தாலும் பேச்சு வேகத்திலேயோ அல்லது ஒன்று சொல்லிப் பார்ப்போம் என்றோ அவர் அன்றைக்கு விறுவிறுப்பாகவே பேசியிருக் கிறார். பேருந்துக் கட்டணம் உயர்த்தியிருக்கிறீர்கள் என்றார். அது வரி அல்ல. கட்டணம் வேறு. வரி வேறு. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள் என்று சொன்னார்.
பேருந்துக் கட்டணத்தைப் பொறுத்தவரையிலும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டாலும் நியாயம் நம் பக்கம் இருப்பது நன்றாகத் தெரியும். புறநகர்ப் பேருந்துகளைப் பொறுத்தவரை, ஆந்திராவில் ஒரு கிலோமீட்டருக்கு 30 காசு; கர்நாடகத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 24 காசு: கேரளாவில் ஒரு கிலோமீட்டருக்கு 28 காசு; மராட்டியத்திலே ஒரு கிலோமீட்டருக்கு 30 காசு; குஜராத்திலே ஒரு கிலோமீட்டருக்கு 25.56 காசு; ராஜஸ்தானில் ஒரு கிலோமீட்டருக்கு 28 காசு: ஒரிசாவில் ஒரு கிலோ மீட்டருக்கு 26 காசு; அரியானாவில் 1 கிலோமீட்டருக்கு 35.36 காசு; தமிழகத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 22 காசுதான்
விரைவுப் பேருந்துக் கட்டணம் என்று என்று எடுத்துக் கொண்டால் ஆந்திராவில் ஒரு கிலோமீட்டருக்கு 42 காசு; கர்நாடகாவில் 29.50 காசு; கேரளாவில் ஒரு கிலோமீட்டருக்கு 34.50 காசு; மராட்டியத்திலே ஒரு கிலோமீட்டருக்கு 39.10 காசு; குஜராத்திலே ஒரு கிலோமீட்டருக்கு 35.70 காசு; ராஜஸ்தானிலே ஒரு கிலோமீட்டருக்கு 34 காசு; ஒரிசாவிலே ஒரு கிலோமீட்டருக்கு 28 காசு; அரியானாவில் 1 கிலோமீட்டருக்கு 42.20 காசு; தமிழகத்திலே ஒரு கிலோமீட்டருக்கு 25 காசு; இதையும் மறந்துவிடக் கூடாது.