கலைஞரின் சட்டமன்ற உரைகள்
471
அதேபோல அரிசி விலையில் என்ன உயர்த்தி விட்டோம்? (குறுக்கீடு) நான் பேசி முடித்துவிடுகிறேன்.
திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...
மாண்புமிகு பேரவைத் தலைவர்: முதலமைச்சர் பேசி
முடிக்கட்டும்
திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரே ஒரு நிமிடம் கொடுங்கள்.
மாண்புமிகு
பேரவைத் தலைவர்: நீங்கள்
உட்காருங்கள். நான் அனுமதி கொடுக்கவில்லை.
திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரே ஒரு நிமிடத்தில் முடித்துவிடுகிறேன்; பேருந்துக் கட்டணத்தைப் பற்றி மட்டும்.
மாண்புமிகு பேரவைத் தலைவர்: சரி, சொல்லுங்கள்.
திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேருந்துக் கட்டணத்தைப் பொறுத்தவரையில் மாண்புமிகு முதல்வர் இந்த அவையிலே குறிப்பிட்டு இருக்கிறார்கள். 2001 வரை நாங்கள் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவே மாட்டோம் என்று கூறிவிட்டு, தற்போது 2001க்கு முன்பாக, 2000லே உயர்த்தி இருக்கிறார் என்பதை மட்டும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, முதலில் உயர்த்திய நேரத்தில் குறைக்கச் சொன்னபொழுது, இதைவிட 2001 வரையிலும் உயர்த்த மாட்டோம் என்று சொன்னேன். பிறகு அந்தக் கட்டணம் குறைக்கப்பட்டுவிட்டது. அதை மறந்துவிட்டு பேசக்கூடாது; முறையல்ல.
அரிசியைப் பொறுத்தவரையில் கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ஒரு கிலோ 6 ரூபாய் 40 காசு; வறுமைக் கோட்டுக்கு மேலேயுள்ளவர்களுக்கு 12 ரூபாய் 75 காசு. கேரளாவிலே 6 ரூபாய் 40 காசு வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு; வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு 12 ரூபாய் 40 காசு. ஆந்திராவில்