பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

1989 நிதிநிலை அறிக்கை மீது

தவறான தகவல் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். இது 10 விழுக்காடு அல்ல; 23.50 விழுக்காடாகும். மேலும் வெளிச்சந்தைக் கடன், நிதி நிறுவனங்களிடமிருந்து பெறும் கடன், மத்திய அரசிடமிருந்து பெறுகின்ற கடன் ஆகியவற்றின் மூலம் குடிநீர்த் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், சாலை வசதி மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு 1,867 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஆகவே, உறுப்பினர் பெற்ற தகவல் தவறானது என்று மீண்டும் ஒரு முறை தெரிவிக்க விரும்புகின்றேன்.

நம்முடைய அருமை நண்பர் லத்தீப் அவர்கள் 2000- 2001ஆம் ஆண்டில் அரசு அலுவலர்களுக்கு அளிக்கும் சம்பளம் குறித்த செலவு இதிலே குறிப்பிடப்படவில்லை. எல்லாப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்துவிட்டேன் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் புரட்டிப் பார்க்காத புத்தகம் ஒன்றும் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை அவர்கள் புரட்டிப் பார்த்திருந்தால் உண்மை நிலையைத் தெரிந்திருக்க முடியும். நிதிநிலைக் குறிப்பின், வரவு செலவுத் திட்ட வெளியீடு 72 Appendix to the Budget Memorandum அதிலே அரசு ஊழியர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கு அளிக்கும் சம்பளம், Revenue Account-லே எவ்வளவு என்கின்ற விவரம் எல்லாம் இருக்கிறது. Revenue Account-லே மாத்திரம் ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது என்பதை அருமை நண்பர் லத்தீப் அவர்களுக்கு நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். புரட்டிப் புரட்டிப் பார்த்தேன், இல்லவே இல்லை என்று சொன்னார். இவ்வளவு பெரிய தொகையை எப்படி விட்டுவிட முடியும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே, அரசு அலுவலர்களுக்கு அளிக்கின்ற சம்பளச் செலவு 8,487 கோடி ரூபாய், ஓய்வூதியப் பயன்களுக்கான செலவு 2,420 கோடி ரூபாய். இந்த இரண்டு இனங்கள் மாநிலத்தின் மொத்த வருவாயில் 66.2 விழுக்காடு. மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லாத Tax and Non-Tax Revenues - வருவாயில் இது 103 விழுக்காடாகும் என்பதையும் நான் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். அதிகச் செலவு, அதிகமாக அரசு ஊழியர்களுக்குத் தந்துவிடுகிறோம் என்ற அந்தக் குற்றச்சாட்டுக்காக அல்ல. திட்டம் என்றால்,