பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

487

"Under Development Action Plan, Memorandum of Under- standing (MoU) was entered into by the State Government and the Apex Bank with NABARD on 24.12.1994 which contains several action points. One of the action points put forth under recovery performance reads as follows:-

"It also notes that NABARD's support will not be available to DCC Banks, TNSCB in the State, if any interest loan waiver is announced across the Board or any steps interfering with the re- covery problem of Co-operative banks are initiated."

இப்படி ஒரு ஒப்பந்தமே, கடந்த கால அரசால் போடப்பட்டு உள்ளது. இதற்குமேல் நான் என்ன செய்ய முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அதனால்தான், அபராத வட்டியை மாத்திரமல்லாமல், சென்ற ஆண்டு 6.25 சதவிகிதம் அரசின் சார்பில் அந்தக் கடன் வட்டியிலே, அரசின் சார்பிலே ஊக்குவிப்புத் தொகையாக, அதைக் கட்டிவிட்டால், தருவது என்று அவர்களுக்குக் கொடுத்தோம், இதை இந்த ஆண்டு 7 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியிருக்கிறோம் உதாரணமாக, அது எப்படிச் செயல்படும் என்று கேட்டால், 1,000 ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு 150 ரூபாய் வட்டி என்றால், நாம் தருவது 70 ரூபாய், அரசாங்கம் 70 ரூபாய் வரை கட்டிவிடும். 80 ரூபாயை விவசாயி கட்டினால் போதும். அதுதான் இன்றைக்குச் செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடு. இது பாக்கி மாநிலங்களிலேயெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டதா என்றால், கிடையாது. கேரளாவிலே, குறிப்பிட்ட நாளுக்குள் வட்டியையும், அசலையும் திரும்பச் செலுத்துபவர்களுக்கு, அபராத வட்டி மாத்திரம்தான் தள்ளுபடி செய்யப்படுகிறது மேற்கு வங்கத்திலே அதுவும் இல்லை. அபராத வட்டிகூட அங்கே தள்ளுபடி கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, நாம் இந்த அளவிற்குச் செய்திருப்பது பெரும் இழப்பிற்கு இடையே, பெரும் சங்கடத்திற்கு இடையே, சிரமத்திற்கு இடையேதான் செய்து இருக்கிறோம் இன்னொன்று. விவசாயிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த பாதை கட்டணம் Track Rent - இரத்து செய்யப்பட்டுவிட்டது. கரும்பு விவசாயிகளுக்கு, தனியார் கரும்பு ஆலை தர

க்