பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

489

களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காகத்தான் இந்த முந்திரி சாகுபடித் திட்டம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் அந்தக் காலத்து காலத்து கதைகள். உங்களுக்குத் தெரியும், மாமல்லபுரம் பழைய சாலையிலே, பையனூர் கிராமத்திலே தமது பங்களாவிற்குப் பக்கத்திலே சுமார் 21/2 ஏக்கர் அரசு நிலத்தை திருமதி சசிகலா ஆக்கிரமிப்பு செய்து அந்த நிலத்திலே சுமார் 1 ஏக்கர் 25 சென்ட் பரப்பளவிலே அமைந்துள்ள குளத்தை- அந்தக் குளம் கிராமப் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் குடிநீருக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த குளம் - அந்தக் குளத்தை ஆழப்படுத்தி நீச்சல் குளமாக மாற்றி அமைத்துக் கட்டுவதற்காக அதை ஆக்கிரமித்தார்கள். அந்த ஆக்கிரமிப்புகள், கழக ஆட்சியில் 11.2.1997 அன்று அகற்றப்பட்டு, குளத்தை பையனூர் கிராம பொது மக்களும், செய்யப் கால்நடைகளும் பயன் படுத்துவதற்கு வழி பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் திருமதி ஜே. இளவரசி என்பவர், ஓடை, மடுவு மற்றும் குளம் என்று வகைப்பாடு செய்யப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான சுமார் ஆறரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, முள்வேலியும், மதில் சுவரும் அமைத்திருந்தார். இந்த ஆக்கிரமிப்புகளும் 11.2.1997 அன்று அகற்றப்பட்டன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

கோரினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில், அதிலிவாக்கம் மற்றும் மேனகாபுரம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை “மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணகுமார் என்பவர், பப்பாளி மரங்கள் வளர்ப்பதற்கும், அதன் அடிப்படையில் தொடங்கக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், நில ஒப்படை அனைத்தும் மேய்க்கால் புறம்போக்கு மற்றும் புஞ்சை அனாதீன நிலங்கள் ஆகும். அதில் 110 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் சமூகக் காடுகள் திட்டத்தின்கீழ், யூகலிப்டஸ் வளர்க்கப்பட்டிருந்தன. அந்த மரங்களின் மதிப்பு 31 இலட்சத்து 25 ஆயிரத்து 963 ரூபாய். அந்த நிலங்கள் அனைத்தும் Reverse forest-ஐ ஒட்டி அமைந்துள்ளபோதிலும்,

அவை