பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

நிதிநிலை அறிக்கை மீது

கோயில்கள் சேதமடைந்ததற்குத் தரப்பட்ட நிதியுதவி ரூ.3.03 லட்சம். சொத்து சேதமுற்றோருக்குத் தரப்பட்ட நிதியுதவி ரூ. 1.12 கோடி. மொத்தம் ரூ. 2,75,75,000. இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ. 5 கோடி தரப்பட்டிருக்கிறது.

குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து விசாரணைக்காக அமைக்கப்பட்ட நீதியரசர் கோகுலகிருஷ்ணன் விசாரணை ஆணையம் தனது அறிக்கையினை அரசுக்கு 31.1.2000 அன்று முழுமையாகச் சமர்ப்பித்து விட்டது. இந்த அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சட்டப் பேரவையில் வைக்கப்பட்டு, இது குறித்து ஆணைகளும் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கே. சுப்பராயன்: பேரவைத் தலைவர் அவர்களே, நான் விவாதத்தின்போது எழுப்பிய பிரச்சினை குண்டு வெடிப்பில் கிட்டத்தட்ட ஒருசில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்தான், சொத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் பெரும் பகுதியினர் மனு போட்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்கு நட்ட ஈடு இன்னும் வழங்கப்படவில்லை. வழங்கப்படாத அனைவருக்கும் எப்போது நட்ட ஈடு வழங்கப்படும் என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான் நான் இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டேன். இன்னும் Pendingல் இருக்கிறவர்களுக்கு எந்தக் காலவரையறைக்குள் வழங்கப்படும் அறிவிப்பீர்களா என்று அறிய விரும்புகிறேன்.

என்பதை

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அதைத்தான் நான் என்னுடைய பேச்சிலே சொல்லியிருக்கிறேனே. இடைக்கால அறிக்கைகள்தான் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தரப்பட்டிருக்கின்றன. இந்த அறிக்கையொட்டி நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் மிச்சம் தரப்பட வேண்டியது இருக்கிறது. முழுமையான அறிக்கை விரைவில் அவையிலே வைக்கப்படும். அதிலே எல்லா விவரங்களும் அடங்கி யிருக்கும். அதற்குப் பிறகு மிச்சம் யார், யாருக்குத் தர வேண்டுமோ, அந்த எஞ்சிய தொகை மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்று. சிறு தொழிலதிபர்களை நான் கூட்டிய கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று சுப்பராயன் அவர்கள்