கலைஞரின் சட்டமன்ற உரைகள்
495
முறையைக் கொண்டு வருவது குறித்து 16.11.1999 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சர்களுடைய கூட்டத்திலே விவாதிக்கப்பட்டு படிப்படியாக சலுகைகளையெல்லாம் நீக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே வரிச் சலுகை அளிப்பது குறித்து 23.1.2000 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலே விவாதித்து அரசு ஆணை நிலை எண் 12, வணிக வரித் துறை, நாள் 23.1.2000ல் ஆணை வெளியிடப்பட்டது. ஏற்கெனவே அந்த ஆணையின்படி சலுகைகளை அனுபவித்து வரும் தொழிற்சாலைகள் தகுதிக் காலம் வரை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்றும், இனிமேல் புதிதாகத் தொடங்கப் படும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடையாது என்றும், ஏற்கெனவே கட்டுமானப் பணி தொடங்கி Pipeline உற்பத்தியைத் தொடங்காத தொழிற்சாலைகள் 22.1.2002க்குள் உற்பத்தியைத் தொடங்கியிருந்தால் அச்சலுகைகளைப் பெறலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஊக்க உதவிச் சலுகை புதிய தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது விரிவாக்கம், மாற்றியமைப்பு செய்யும் தொழிற்சாலை களுக்கும் பொருந்துமா என்பது குறித்து விளக்கம் தேவைப் பட்டது. எனவேதான் 3.2.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிலே பின்பற்றப்படும் முறையையும் கருத்திலேகொண்டு ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகள் விரிவாக்கம், மாற்றுத் தொழிலிலே ஈடுபட்டு 23.1.2000 அல்லது அதற்கு முன்பாக தேவையான இயந்திரத் தளவாடங்களைப் பெற்றிருந்து அவை 22.1.2001 அல்லது அதற்கு முன்பாக தனது விற்பனை உற்பத்தியைத் தொடங்கியிருந்தால் மட்டுமே சலுகையைப் பெறலாம் என்ற முடிவு எடுத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனவேதான் இரண்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டியதாயிற்று. எந்த முதலாளிக்கும், எந்த அதிபருக்கும் ஏதோ சலுகை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல; இன்னும் சொல்லப்போனால் பெரிய முதலாளிகள் இதிலே பாதிக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள், மறுபடியும் அதைக் கொண்டு வாருங்கள், கொண்டு வாருங்கள் என்று. நாங்கள் இப்போது