498
நிதிநிலை அறிக்கை மீது
முதல்வர் அவர்கள் பட்டியலிட்டுக் காட்டினார்கள். இதே அவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்று கேட்டபோது எங்களை முழுமையாக 5 ஆண்டுகள் நீங்கள் ஆளவிடுங்கள்; இப்போதே நீங்கள் கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும் என்று ஏற்கெனவே கூறியிருப்பது அவைக் குறிப்பிலே இருக்கின்றது. ஆகவே, நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு வருடத்திற்கு ஐம்பதே ஐம்பது ரூபாய் கொடுத்திருந்தால்கூட, இந்த 4 ஆண்டுகளில் 200 ரூபாய்...
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: 4 ஆண்டுகள் தான் முடிந்திருக்கின்றன. 5 ஆண்டுகள் ஆள விடுங்கள். இப்போது ஆளை விடுங்கள். (பலத்த சிரிப்பு)
இன்னும் ஏராளமான குறிப்புகள் வைத்திருக்கின்றேன், உறுப்பினர் செல்லக்குமார் போன்றவர்களுக்கெல்லாம் சில விளக்கங்கள் தருவதற்கு. தொடர்ந்து கூட்டம் நடைபெற இருக்கிற காரணத்தால் பல்வேறு மானியங்களில் அவற்றைப் பற்றிப் பேசலாம் என்ற அந்த அறிவிப்போடு, சில அறிவிப்புக்களை, முக்கியமான அறிவிப்புக்களை இம் மாமன்றத்தின் மூலமாகத் தமிழ் மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
மு
டாக்டர் அ. செல்லக்குமார்: ஒரேயொரு சின்ன
பாயின்ட்.
மாண்புமிகு பேரவைத் தலைவர்: சரி, சொல்லுங்கள். டாக்டர் அ. செல்லக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சத்துணவு உருண்டை வாங்குவது பற்றி நான் இன்னும் பேசலாம் என்று நேற்றைக்கு நீங்கள்.
சொன்னீர்கள்.
ம்
மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை, இல்லை, நான் உங்களைப் பேசலாம் என்று சொல்லவில்லை. நீங்கள் தவறான கருத்தைச் சொன்னால் நான் நடவடிக்கை எடுப்பேன். உங்களை ஒன்றும் பேச நான் சொல்லவில்லை. முதலமைச்சர் அவர்கள் பேச இருக்கிறார்கள். நீங்கள் பதிலைக் கேளுங்கள் என்று சொன்னேன். (குறுக்கீடு) நீங்கள் உட்காருங்கள்.