பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

49

மொழியப்பட்டு பெரும்பாலான வாக்குகளில் அந்தத் தீ தீர்மானம் 1974ஆம் ஆண்டில் இந்த அவையில் நிறைவேறியது. அப்படி நிறைவேறிய போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அண்ணா தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சி பற்றிக் குறிப்பிடவில்லை என்று எடுத்துச் சொன்னார்கள். அந்தத் தீர்மானத்தை அவர்கள் ஆதரிக்கவும் முன்வரவில்லை. அது மாத்திரமல்ல, மாநில சுயாட்சித் தீர்மானத்தை ஆதரிப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரத்தை வலுப்படுத்துவதாகும் என்று அப்படிப்பட்ட கருத்தைக்கூட அன்றையதினம் உள்ளேயும் வெளியேயும் எடுத்துச் சொல்லப்பட்டதாக எனக்கு நினைவு. ஆனால் இப்போதுகூட அண்ணா அவர்கள் விளக்கமாகச்

சொல்லவில்லை

என்ற ஒரு கருத்து ஆளுங்கட்சி உறுப்பினர்களால் இந்த அவையிலே கூறப்பட்டதை நான் இந்த அவையிலே இல்லாமல் இல்லாமல் உடல் நலக்குறைவின் காரணமாகப் பத்திரிகைகளில் மாத்திரம் படித்துத் தெரிந்துகொண்டேன். அண்ணா அவர்கள் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். வலுவான மத்திய அரசு பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்பது தவறு, மாநில சுயாட்சி தரத் தயக்கம் காட்டுவார்களானால் அளவுக்கு மீறி அதிகாரங்களை தாங்கித் தாங்கி பாதுகாப்பு போன்ற விஷயங்களில் சோடை போய்விடுவார்களோ என்பதுதான் எங்கள் சந்தேகம். மேல் அதிகாரம் அனைத்தும் டெல்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்துள்ளது. 28.7.1968இல் அறிஞர் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சி மாநாட்டில் பேசியது. அது மாத்திரமல்ல, இன்னும் தீவிரமாக அந்த மாநாட்டிலே ஒரு கருத்தைச் சொன்னார்கள். நாட்டுப் பாதுகாப்பு தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தும் பெற சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் மாநிலங்கள் விரும்பித்தருகின்ற மீதியுள்ள அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும் என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை நான் தலைவராகவும் நாவலர் திராவிட முன்னேற்றக்

3 - க.ச.உ (நிஅ) ப-2