பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

நிதிநிலை அறிக்கை மீது

வசதித் திட்டம், சிறார்களுக்கு ஆலயங்களில் கருணை இல்லங்கள்

நீண்டகாலக் கனவாக இருந்த சேலம் உருக்காலைத் திட்டத்திற்காக டில்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலே வாதாடி போராடி, அம்மையார் இந்திராகாந்தி அவர்கள் தலைமையிலே நடைபெற்ற அந்த மாநாட்டிலே அதை வலியுறுத்தி, வெளிநடப்புக்கூட செய்து, அதன் காரணமாக உடனடியாக சேலம் உருக்காலை வழங்கப்பட்டதை அறிவீர்கள். நில உச்சவரம்புச் சட்டம், உச்சவரம்பு 15 ஸ்டான்டர்ட் ஏக்கர் என்று திருத்தம் செய்யப்பட்டு 1,78,880 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டது. 1,37,236 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் 61,989 பேர் ஆதிதிராவிடர்கள்.

நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்க மின் திட்டம், தூத்துக்குடி இரசாயன உரத்தொழிற்சாலை (ஸ்பிக்), சிட்கோ சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், இராணிப்பேட்டை, ஓசூர், இருங்காட்டுக்கோட்டை, திருபெரும்புதூர், பெருந்துறை கும்முடிப்பூண்டி, கேளம்பாக்கம், செய்யாறு ஆகிய இடங்களில் சிப்காட் தொழில் வளாகங்கள், புஞ்சை நில வரி அறவே நீக்கப்பட்ட நிலை

மனு நீதித் திட்டம், கிராமங்களுக்குச் சென்று அதிகாரிகள் மனுக்களைப் பெற்று ஆங்காங்கே பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற திட்டம், மனுநீதித் திட்டம், நிலக்கரி போக்குவரத்துக்காக, முக்கியமாக இறக்குமதிக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தொடங்கிய அந்தத் திட்டம், இவைகள் எல்லாம் இந்த 5 ஆண்டு காலத்திலே நடைபெற்றன.

பின்னர் 1989 – 91 ஆம் ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட

வகுப்பினருக்கும், வருமான வரம்பிற்கு உட்பட்டு பெண் களுக்கும் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி. அடுத்து மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வருமான வரம்பிற்கு உட்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி.

பெண்களுக்கு சொத்து உரிமை வழங்குகின்ற சட்டம், 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களும், நம்முடைய பேரவைத் தலைவர் அவர்களுடைய தந்தையார் திரு. பி.டி. ராஜன்