பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

நிதிநிலை அறிக்கை மீது

வேண்டும் என்பதற்குத் திராவிட நாடு கேட்டோம். மொழி பாதுகாப்புக் கொள்கையை விட்டுவிடவில்லை. மாநில சர்க்கார் பல அதிகாரங்களை பலவிதங்களில் பெறவேண்டும் என்பதற்காக கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை என்று இந்தக் காரணங்களை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்திய அண்ணா அவர்கள் அன்றைக்குச் சொன்னார். அண்ணா சொன்னாரா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகக் கேட்டபோது இங்கே அமர்ந்திருக்கின்ற மின்துறை அமைச்சர் அவர்கள் எழுந்து நின்று, இதோ பாருங்கள் அண்ணா சொல்கிறார் என்று இல்லஸ்ட்ரேட்டட் பத்திரிகையை சான்றாகப் படித்துக் காட்டினார்கள்.

அண்ணா அவர்களுடைய அழகான வண்ணப் படத்தைப் பாருங்கள். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி 26.9.1965ல் மாநில சுயாட்சி அங்கேயும் எவ்வளவு மறைமுகமாக இருக்கின்றது என்பதை நான் நினைவூட்டுகிறேன். அண்ணாவை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நிருபர் கேட்கிறார்.

"What are the main aims of the D.M.K.?"

1965ம் ஆண்டு கேட்கிறார். அண்ணா சொல்கிறார்;

"A Dravid Union within the Indian Constitution."

திராவிடக் கூட்டுறவு அல்லது திராவிடக் கூட்டமைப்பு என்று சொன்னாரே தவிர, அண்ணா அப்பொழுதும் அகில இந்தியா என்பதை, இந்தக் கட்சியை அகில இந்தியக் கட்சியாக ஆக்க வேண்டுமென்பதை அண்ணா அன்றைக்கும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசி வரையிலே ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்து வருகிறார்.

'The re-shaping of the Constitution, so it becomes effectively federal', fuller autonomy to the States. Proportional representation which seeks to solve the problem of Communal minorities, democratic socialism and eradication of castes.'

இது அண்ணா அவர்கள் அன்றைக்கு அந்த வாரப் பத்திரிகை ஆசிரியருக்குச் சொன்ன பதில். அது மாத்திரமா? அந்த நிருபர் கேட்கிறார் மறுபடியும் :