56
ல
நிதிநிலை அறிக்கை மீது
தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றுவீர்களேயானால் அதை வரவேற்கிற முதல் ஆளாகக் கருணாநிதி இருப்பான்' என்று நான் அன்றைக்கும் சொன்னேன், இன்றைக்கும் நான் அரசுக்குச் சொல்கிறேன். மாநில சுயாட்சித் தீர்மானத்தை, அரசின் சார்பில் இந்த அவையிலே நிறைவேற்றுவதற்கு விரைவிலே ஒரு சட்ட முன்வடிவைக்கொண்டு வாருங்கள் அதை நிறைவேற்றித்தர, ஏகமனதாக நிறைவேற்றித்தர திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்பதை நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
என
இறுதியாக குடிக்கத் தண்ணீரின்றி மக்கள் குமுறுகின்ற சூழ்நிலைக்கு விடிவுகாணாமல், விலைவாசி ஏற்றம் விஷம் ஏறுவதற்குப் பரிகாரம் காணாமல், அரிசிக்கும் மண்ணெண்ணெய்க்கும் க்யூ அங்கிங்கெணாதபடி நிற்கின்ற அவல நிலையை அகற்றுவதற்கு வழிவகை காணாமல், இருட்டறையில் உள்ளதடா நாடு என்று பாவேந்தர் பாடியது போல் தமிழ்நாடு இன்றைக்குத் தவித்துக் கொண்டிருக்கிறது. அதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளிக்குத் தொல்லையும், விவசாயிக்கு வேதனையும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இவர்களுக்கு மிரட்டலும் நிறைந்த ஒரு நிலையிலே இந்த வரவு-செலவுத் திட்டம் வந்திருக்கிறது வெறும் விளம்பரத்திற்கு மாத்திரம் இந்த அரசு தன்னைப் பயன்படுத்திக்கொள்கிறதே அல்லாமல், நற்பணிகளுக்குத் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
கடைசியாகச் சொல்கிறேன். இதோ என் கையிலே இருப்பது இந்திய வரலாறு 6ஆம் வகுப்புப் புத்தகம். இந்திய வரலாறு நூலில் அலெக்சாண்டர் வருகிறார். சமண, பௌத்த மதங்கள் வருகின்றன. எல்லோரும் வருகிறார்கள். எல்லோரும் வந்து சுதந்திரம் வருகிறது. சுதந்திரம் வந்த பிறகு இந்தச் சரித்திரப் புத்தகத்தில் நேரு இந்தியாவினுடைய பிரதமர் ஆகிறார்.
இராஜாஜி கவர்னர்-ஜெனரலாகிறார். அதோடு இந்த வரலாறு முடிகிறது. அதற்குப் பிறகு இந்தியத்துணைக் கண்டத்திலே ஏற்பட்ட எமர்ஜென்சிக்குப் பிறகு ஏற்பட்ட ஜனதா ஆட்சிக்கு இந்த இந்திய வரலாற்றுப் புத்தகத்திலே
"