பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

69

முடியாது. அவர்களே 'இல்லை' என்று மறுத்து விடுகின்றார்கள். இங்கே அவரவர்களே விளங்கவைத்து பேசி புரிந்து கொள்ளவும், சமாதானமாகப் போகவும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதால், நான் அதை வரவேற்கிறேன். கூடுமான வரையில் பத்திரிகைகளை வைத்துக் கொண்டு நாம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால் அதற்கு இந்த நிலைமைதான் ஏற்படும் என்பதை நினைவூட்டுகிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு மேலவைத் தலைவர் அவர்களே, வெளியிலே பேசுவது, பத்திரிகையிலே வருவது இவற்றையெல்லாம் வைத்து இங்கே பேசுவது சில நாட்களாக அனுமதிக்கப்பட்டுவிட்ட காரணத்தினாலே, அதுவும் இந்த அவை பற்றிய குறிப்புகள் அ

என்கின்ற

காரணத்தினாலேயே, அதுவும் நாவலர் அவர்கள் இருந்து நடத்திய ஆட்சியைப் பற்றி அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று பத்திரிகையில் வந்திருக்கிறது என்ற காரணத்தினாலேயே, அவைகளை இங்கே கோடிட்டுக் காட்டினேனே தவிர, வேறல்ல. அவர்கள் சொல்லிவிட்டார்கள். அண்ணா அவர்கள் பாடுபட்டு 1967லே உருவாக்கிய ஆட்சியை கருணாநிதி சின்னாபின்னம் ஆக்கினார் என்று தான் பேசவில்லை என்றும் 'அண்ணா' பத்திரிகையிலே வந்தது தவறு என்றும் அவர்கள் சொல்லி விட்டார்கள். இனி தவறைத் திருத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு 'அண்ணா' பத்திரிகைக்குரியது என்பதை நான் எடுத்துக் காட்டுகிறேன்.

நான் இங்கே சொல்லவந்தது. 1976ஆம் ஆண்டு அவர்கள் எழுதிய ய கட்டுரையில், கழக ஆட்சியிலே தமிழகத்திலே எந்த அளவிற்கு வளம் செறிந்து இருந்தது என்பதற்கும், தமிழகம் முற்போக்குப் பாதையிலே நடந்தது என்பதற்கும் இன்றைய நிதி அமைச்சர் அவர்கள் அன்றைய தினம் தந்த விளக்கங்கள் என்பதற்காக அவைகளை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் குறிப்பிட்டிருக் கின்றார், “கழக அரசு பாடுபட்டதன் காரணமாக 1966-ல் 54 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தியை 1976-ல் 80 லட்சம் டன்னாக பெருக்கிக் காட்ட முடிந்தது" என்று சொல்லியிருக்கிறார். 1976-லே 80 லட்சம் 80 லட்சம் டன்னாக நாங்கள் பெருக்கிக் காட்டியிருக்கிறோம் என்று அப்போதே