72
நிதிநிலை அறிக்கை மீது
உயர்ந்திருக்கிறது. ஆனால் ருமானம் உயர்ந்துள்ள அளவுக்கு பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கப்படுகின்ற தொகை உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன். மாண்புமிகு டாக்டர் நாவலர் அவர்கள் பேரவையிலே நிதிநிலை அறிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கையில் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழகம் வளர்ச்சியில் கீழ்நோக்கிப் போய்விட்டது என்று சிலர் சொன்னார்கள்.
ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 7,8 ஆண்டுகளாக தமிழகம் எதிலும் பின்தங்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள 1976-77ல் கல்விக்காக ஒதுக்கியது ரூ.141 கோடி. ஆனால் இன்று ரூ.468 கோடியாக அது உயர்ந்துவிட்டது என்று சொல்லி ஒவ்வொரு துறை பற்றியும் அவர்கள் பேரவையிலே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் 1975-76ல் கழக ஆட்சியின்போது மொத்த வருமானம் 501 கோடி ரூபாய். அந்தத் துறைக்கு அன்றைக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட இன்றைக்கு 41/2 மடங்கு அதிக வருவாய் வந்துள்ள காலகட்டத்தில் அதே விகிதத்தில் அதிகத் தொகை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். வேண்டும். ஆனால் ஒதுக்கியுள்ள தொகையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. 1975-76ல் 501 கோடி ரூபாய் வருமானம் வந்தபோது கல்விக்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு ஒதுக்கியது 118 கோடி ரூபாய். அதாவது மொத்த வருவாயில் 23.64 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டது. இப்பொழுது 23.64 சதவிகித அளவுக்கு ஒதுக்குவது என்றால் 559.80 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக கல்விக்காக 468 கோடி ரூபாய்தான் ஒதுக்கப் பட்டிருக்கிறது என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட கடமைப் பட்டிருக்கிறேன். அதாவது 19.06 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 20.01 சதவிகிதம்தான் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த
ஆண்டு அதைவிடவும் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதோடு மாத்திரமல்லாமல் இன்னும் சில முக்கியமான துறைகளுக்கு