பக்கம்:நித்தியமல்லி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கதைக்குள் கதை திராவிடமுன்னேற்றக்கழத்தின் மு ன் ன ரிை த் தலைவர்கள் சிலர் வருகிற அறுபத்தேழு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை விளக்கி, தங்கள் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்று வது உறுதி என்றும் அவ்வாறு வெற்றி பெற்ருல், தங்களை நம்பிய பொது மிக்களுக்குத் தாங்கள் முழு நேரப்பணி செய்வது நிச்சயம் என்றும் மெரினுகடற். கரையில் பேசிய பொதுக் கூட்டணிப்பேச்சை அந்தச் செய்தித்தாள் தலைப்புச் செய்தியாக கொட்டை எழுத்துக்களில் மரக்கட்டை அச்சில் வெளியிட்டிருந்தது: இதைப் படித்ததும் தமிழ்ச்சுடர் அசந்துவிட்டாள். அச் செய்தி மலைப்பாகவும் அதிசயமாகவும் தோன்றியது. அந்நிலையில், அவள் மனம் கட்டுக்கடங்காத ஈடுபாடு கொண்டது. உடனே, "அம்மா! அம்மா!' என்று. அலட்டினள். x - - கைவேலையை அடுப்படியில் அப்படி அப்படியே போட்டுவிட்டு என்னவோ ஏதோ வெள்று பரக்கப்பரக்க பறந்து ஓடிவந்தாள் மரகதத்தம்மாள். 'என்னம்மா விஷயம்?' என்ருள். . பதிலாடாமல், அந்தப் பத்திரிகையை நீட்டி, தலைப்புச் செய்தி எழுத்துக்களில் வலது கை ஆள்காட்டி விரலைச் சுடடிக்காட்டினுள் தமிழ்ச்சுடர். "ஏம்மா, இவங்க தேர்தலிலே ஜெயிச்சு ஆட்சியைப் பிடிச்சிடு வாங்களாம்மா?’ என்று துடிப்புடன் விசாரித்தாள். இலேசாகச் சிரித்தாள் மரகதத்தம்மாள். எனக்கு ஜோஸ்யம் தெரியாதே அம்மா?...இந்தத் தலைவிதியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/105&oldid=786544" இலிருந்து மீள்விக்கப்பட்டது