பக்கம்:நித்தியமல்லி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


பேச்சை மகளிடம் எப்படி ஆரம்பிப்பது? தன் முடிவுகேட்டு மகள் எப்படி அதை வரவேற். turrsh? - இப்படிப்பட்ட கட்டங்களைச் சமாளிப்பதற்குரிய இதய வலுவும் அவளே அடைந்திருந்தது. அந்த வலு. தாய்மையின் கடமை என்ற அந்த ஒரே அடிப்படையி” லேயே காலூன்றி நின்றது. மனப் புயலுக்குப்பின் தன் மனத்தில் விளைந்த அமைதியை அவளுக்கு அன்றிரவு: பன்னிரண்டு மணிக்குமேலாக நல்ல மூச்சையும் நல்ல தூக்கத்தையும் அருளின. விடிந்ததும், மகளிடம் எச்ச ரிக்கையுடன் பேச்ச்ை ஆரம்பித்தபோதுதான் எத்தனை இடர்ப்பாடுகள் முளைத்துவிட்டன ? பிறர்பொருளை நயவஞ்சகமாக அபகரித்து எக்காள மிடும் கடவுளின் ரகசியக் குற்றவாளிக்கு நிகராகவே. வானம் திடீரென்று மந்தாரம் போட்டது: அவள் மனமோ வெளி வாங்கிவிட்டிருந்தது. அந்தர். நல்ல பலனின் சுமூகமான விளைவாக, அவள் ஒரு தீர்மா னத்துக்கு வந்துவிட்டிருந்தாள். வாடைக் காற்றின் சுகம் வெளி உஷ்ணத்தையே அழுத்திவிட்டிருந்தது. மரகதத்தம்மையின்-ஆமாம், தமிழ்ச் சுடரின் மாதாவின் முடிவு என்ன? . ، அவள் தன்னைத்திானே எண்ணிளுள் தனக்குத், தானே எண்ணமிட்டாள். அவ்வெண்ணத்தில் அவள் மரகதமாக உருக்கொள்ளவில்லை; மரகதத்தம்மாளாகவே. உருக்கொண்டிருந்தாள். தமிழ்ச்சுடரின் எதிர்காலத். திட்டத்தில்-தமிழ்ச்சுடரின் வருங்கால மனமகிழ்ச்சியில் அக்கறையும் அன்பும் பரிவும் நேர்மையும் கொண்ட லட் சியத் தாயாக அவள் புதிய உள்ளம் கொண்டு இலங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/117&oldid=1277370" இலிருந்து மீள்விக்கப்பட்டது