பக்கம்:நித்தியமல்லி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 மரகதத்தம்மை தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டாள். பூஜை அறைக்குச் சென்ருள். விபூதியை அள்ளி நெற்றியில் அப்பிக்கொண்டு, விழுந்து வணங்கி எழுந்தாள். என் மகள் உதயணனயே மனப்பூர்வ மாக விரும்பியிருக்கவேண்டும். அப்படியிருந்தால், அப்படியே அவள் எண்ணமும் அமைந்திருந்தால், எப்பாடுபட்டாவது என் பணம் முழுவதையுமே செல. வழித்தாவது அவளுக்கு அவள் மனம் இஷ்டப்பட்ட உதயணனேயே திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். இருவர் மனங்களும் பொருந்தும் போது, இருவர் ஜாதகங்களும் கட்டாயம் பொருந்தியே இருக்கவேண்டும். ஈஸ்வரா! என் முடிவுக்கு நீதான் நல்ல முடிவு காட்டவேண்டும்.' வற்றல் குழம்பு தயாராகிவிட்டது. வாசலில் காரின் சத்தம் கேட்டது. - கூடத்துக்கு வந்து எட்டிப்பார்த்தாள் மரகதத்தம் மாள். . . - : - அப்பொழுது உதயணன் அங்கு வந்து நின்று வணக்கம் சொன்னன். . . . . . . செளக்கியமாய் இருக்கீங்களா?' "ஆமாங்க!” - - "அப்பா எப்படி இருக்காங்க!” : - இப்போ கொஞ்சம் பரவாயில்லை. இடையிலே. கொஞ்சம் முடியலே. இப்போது உடம்பு தேறி ரொம்ப சந்தோஷம். உங்கவிட்டுக்கு வரணும்னு இருந்தேன். நேரம் ஒழியலே கூடிய சீக்கிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/121&oldid=786562" இலிருந்து மீள்விக்கப்பட்டது