பக்கம்:நித்தியமல்லி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132


கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினுள் தமிழ்ச்சுடர். நிலைக்கண்ணுடியில் அவளது புதிய காந்த, சக்தி பிரதிபலிக்கக் கண்டாள். நீராடி, அழகு சேர்த்துக் கொண்டு மணம் கமழ நின்ருள் அவள். ஞாயிற்றுக் கிழமைப் பொழுதைச் சிக்கனமாகவும் பயனுள்ளதாக வும் கழிக்கவென்றுதான் கடலோரம் படைக்கப்பட்டி ருக்க வேண்டும். மஞ்சள் வெய்யிலின் மயக்கும் நிலை புவனத்தைச் சுற்றிச் பின்னிக் கிடந்தது. - மரகதத்தம்மை மாடிப்படிகளேக் கடந்து கொண்டே "சுடர். அம்மா தமிழ்ச்சுடர்' என்று அழைத்தாள். 'இதோ வந்திட்டேனம்மா!' என்று அந்த டைரியையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகள். அதற்குள் அன்னை மேலே வந்து நின்ருள். 'உன் குறிப்பைப்பார்க்கிருயா?' என்ருள். ஊம்!" * உன் மனத்திடம் வருவதென்பது ஆயிரத்திலொரு, வருக்குத்தான் சாத்தியம்' என்ருள் தாய். எதற்காகச் சொன்னுள் இதை? தன் முதல் காதல் தோற்றபின், அவள் வேறிடத்திம்: வாழ்க்கைப்பட்டாளே என்ரு? அர்த்த புஷ்டியுடன் அம்மாவை ஏறிட்டுப் பார்த். தாள் சுடர். அவள் கையில் ஒரு புகைப்படம் இருந்தது. 'அம்மா, இதைப்பார்." என்ருள் மரகதத்தம்மாள் படமொன்றில் சுட சிறுமியாக இருந்தாள். இரு பக்கத்திலும் மரகதமும் அவள் கணவர் குணசீலமும் இருந்தார்கள். மூவரும் மொட்டையடித்துக் கொன் டிருந்தார்கள்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/133&oldid=1277379" இலிருந்து மீள்விக்கப்பட்டது