பக்கம்:நித்தியமல்லி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


சாட்சி இடங் கொடுக்காது. ஆகச்சே, இதை நீங்களே வச்சுக்கிடுங்க. ஆளு, நீங்க என் மகளைக் கல்யாணம் செஞ்சிக்க விருப்பம் தெரிவிச்சு, அந்தக் காரியமும் கபமாய் முடிஞ்சுதின்ன, இந்த வைர நெக்லஸை என் மகளுக்கு நீங்க கொடுக்கிறதிலே எனக்கு யாதொரு ஆட்சேபமும் கிடையாது தம்பி! இனி, நீங்கதான் உங்க முடிவைச் சொல்லவேனும்!” என்று சலனம் சூழச் சொல்லி, சலனம் சூழ உதயணன ஆரறிட்டுப் பார்த்தாள் மரகதத்தம்மாள். பயம் தாய் மனத்தை அலைபாயச் செய்தது. குமாரி தமிழ்ச்சுடர் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே பாவனையாக மதிப்பிடும் பக்குவம் பெற்ற பாங்கில் நிச்சலனமாக அமர்ந்திருந்தாள். கதம்பச்சரம் மணத் தது. நெற்றில் பொட்டு பொலிந்தது. - 'அம்மா! உங்களுடைய பவித்திரமான நினைப்பு எனக்கு ரோமாஞ்சலி உண்டாக்குது. உங்க கருத்துப் படி இந்த வைர நெக்லஸை என் தமிழ்ச்சுடருக்கே பரி சாய்க் கொடுத் திடுறேன். என் அப்பா வேண்டியிருந்த இரண்டாவது கோரிக்கையாவது உங்க மூலமாய் நிறை வேறப் போகுது. இந்த அளவிலே என் அப்பாவோட ஆவி ஒண்னுக்குப் பாதியாவது நிம்மதி அடையமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்குது!.. என் உயிரிலே :யும் உள்ளத்திலேயும் தமிழ்ச்சுடர்தான் என்றென்றைக் கும் உறவாடிக்கிட்டு இருக்கும்... இதேபோல என் நினைப்பு ஒன்றுதான் என் தமிழ்ச்சுடர் மனத்திலும் எண் ணத்திலும் மணம் பரப்பிக்கிட்டு எப்போதுமே இருக்கும் எங்கள் இரண்டு பேருடைய காதலுக்கு நீங்க தான் வாழ்த்துச் சொல்ல வேணும். என்று தழு தழுக்கக் கூறிய உதயணன் எழுந்து மரகதத்தம்மாளின் திருமதி குணசீலனின் பாதங்களில் வணங்கி எழுந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/140&oldid=1277381" இலிருந்து மீள்விக்கப்பட்டது