பக்கம்:நித்தியமல்லி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 மொத்தியிருப்பேன்! அப்படி ஒங்களை கேக்கறதுக்கு எம் மனசு ஒப்பாது! நீங்க இப்ப தந்த நோட்டு கள்ளநோட்டு அம்மா! வேறே ரூபாய் இருந்தால் கொடுங்க. நல்ல ரூபாய்க் குடுங்க. அசல் ரூபாயாய் கொடுங்க!..." சுக்கரித்த ருசிபேதங்களின் நாத அலைகளாக அவன் குரல் ஒலிபரப்பிவிட்டு ஒய்ந்தது. அகங்காரமான ஆண வத்துடன் காஷில் இருந்தவன் தலையை உயர்த்தினன். அந்தி சந்திப்பொழுதானதால், கடையில் அமளி துமளி இன்னமும் ஆரம்பமாகவில்லை. ஆகவேதான், அந்த இளவட்டமான குமாரதேவனுக்கு வாயை ஒட்ட வழி' யும், வழியை ஒட்ட விழியும் கிடைத்தன. எடுப்பார்: கைப்பிள்ளை பேச்சு ஓடியது. ஆனல் மரகதத்தம்மையின் மனத் துடிப்பை அவன் எப்படி அறிவான்? அவள் கண்களில் கொவ்வைப் பழங் கள் கலந்தன. அவள் தான் பெற்ற பெண்ணை ஏறிட்டுப் பார்த்தாள். பார்த்த கண்களின் படபடப்புக்கூட. அடங்கவில்லை. ஆப்போது. "ஐயா காஷியரே! வாயை ரொம்பவும் நீட்டா தீங்க 1 . கள்ள நோட்டு அடிக்கிறது. உங்க பழக்கமாக: இருக்கலாம். அதுதான் சடக்கென்று உங்களுக்கு வாயில் வந்து விட்டது. துணிகளுக்குப் பில் போட்டாகி விட்டதேயென்று பார்க்கிருேம். இல்லாவிட்டால், இந்நேரம் உங்க முகத்திலே விசிறியடிச் சிட்டுப் போயிடு வேன். நெல்லைக் கொட்டிட்டால் அள்ளிடலாம். சொல்லைக் கொட்டினல் அள்ளிட முடியுமா? பாவம். உங்களுக்கென்ன? வாய் புளித்ததோ மாங்காய்ப் புளித். ததோ வென்று பேசலாம். நீங்களும் உங்க பேச்சும் அதுக்கு ஒத்துவரும். ஆன. எங்களோட நிலை. போக்கு. எல்லாத்தையும் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/16&oldid=786586" இலிருந்து மீள்விக்கப்பட்டது