பக்கம்:நித்தியமல்லி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


தமிழ்ச்சுடரின் அப்பா உயிருடன் இருந்திருந்தால்...இந் நேரம் குதித்துக் கும்மாளம் போட்டிருப்பாரே! எ ன் ம க ள் முதல்பரிசு வாங்கி யிருக்காளே, தெரியுமா?’ என்று தன் நண்பர்களிடமெல்லாம் போன்’ பண்ணித் தெரிவித்து மகிழ்வு காட்டியிருப்பாரே? இந் நினைவை மனத்திற்குக்கொண்டுவந்து ப - ர் த் தி ஸ் மரகதத்தம்மை நெஞ்சம் கலங்கியது. அக் கலக்கத்தை தன் புதல்வி அறிந்துவிடக்கூடாதே என்கிற அவசரத்தில் அவள் முகத்தை லாகவமாக துடைத்துக் கொண்டாள். பிறகு மகளைப் பார்த்தாள். பார்த்துவிட்டு தின் கையில் இருந்த மலர் மாலையையும் பார்த்தாள், மரகதத்தம்மை! "தமிழ்ச்சுடர் பரிட்சை எழுதி பட்டம் வாங்கியவுடன், அவளுக்குக் கல்யாணம் செய்துவிடவேணும்! அப்போது தான் என் கவலையும் கடமையும் முடிஞ்சதாக அர்த்தம் !' எதையோ எண்ணிப் பெருமூச் செறிந்தாள் ஆவள். மனத் தளர்ச்சில் தடம் பதிந்தது. மறுபடியும் அவள் திரும்பிப் பார்த்தாள். தன் க ன வ ரி ன் படத்திற்கு முன் நின்று கொண்டு கை தொழுது கொண்டிருந்தாள். தமிழ்ச்சுடர், தன் தந்தை யின் படத்திற்கு முன் பயபக்தியுடன் நின்று வணங்கிக் கொண்டிருந்தாள். மரகதத்தம்மையின் கண்ணிர் வழிந்தது. அவளது தளர்ந்தொடுங்கிய மனம் ரொம்பவும் சங்கடப்பட்டது. தினக்கு ஒரு மாறுதல் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். போலிருந்தது அவளுக்கு. ஆகவே அவள் தன் புத்திரியை நெருங்கி அவளது தோள்மீது ஆதர வாகக் கைவிரல்களைப் பதித்தாள். 'உன் எண்ணங்கள் எல்லாத்தையும் உன் அப்பா நிறைவேத்திக் கொடுப் பாரம்மா!' என்ருள். அவள் நா தழுதழுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/24&oldid=1277295" இலிருந்து மீள்விக்கப்பட்டது