பக்கம்:நித்தியமல்லி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


மல்லிகா பதினெட்டாம் எண் அறையில் அடி இயடுத்து வைத்தாள். தமிழ்ச்சுடர் காலைவிழாவில் நினைவு பதித்தவளாகச் சுற்றுமுற்றும் பார்வையை அலையவிட்டவாறு, சற்றே தாமதித்தாள். உடை சரியாக இருக்கிறதா என்று கவனிக்கத் தன்னைத் தானே குனிந்து பார்த்துக் கொண் டிாள். நினைவின் நிழல் தொண்டையைச் சூழ, அவள் தலையை உயர்த்தியபோது, உள்ளே வா', என்று தன் தோழி அழைக்கக் கண்டாள்; உணர்ந்தாள். பதட்டத் தின் பாதையை வேதனைத் தடுமாற்றத்தின் பாதங் களால் அளந்து கடந்த வண்ணம் உள்ளே நடந்தாள். செருப்புக் காலுடன் செல்வதை உணர்ந்ததும், பின்வச மாக திரும்பி, வெளிப்புறத்தில் காலணிகளைப் போட்டு விட்டு உள்ளே நுழைந்தாள். நெடுமூச்சின் நீள் துணை கொண்டு அவள் சில பெட்’களைக் கடந்தாள். அங்கே! திருவாளர் ஆனந்தரங்கம் அவர்கள் சுயப்பிரக்ஞை யற்ற நிலையில் கிடந்தார். அவரது கம்பீரமான முகம் இப்போது களையிழந்து காணப்பட்டது. அம் முகத்தில் மரணக்களை படிந்திருப்பதாக அவளுக்குப்பட்டது. தனக்குரிய பரிசை ஆனந்தரங்கம் தன்னிடம் கொடுக்க முன்வந்தபோது, அவள் அதை ஏற்க மறுத்த நிகழ்ச் சியை அவள் வேதனையுடன் நினைவு கூர்ந்தாள்: புன்ன கையும் புது நிலவுமாகக் காணப்படும் உதயணனின் திடீர் மாற்றத்துக்ககான விஷயத்தைப் பின்னர் அவள் உய்த்துணர்ந்த நேரத்தில் அவள் மனம் அடைந்த துன் வத்தையும் அவளால் மறந்து விடமுடியாது. அன்புக்குச் சோதனைதான் துன்பமா? துன்பத்தின் நிழலில்தான் அன்பு பரிபக்குவம் எய்துமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/29&oldid=1277298" இலிருந்து மீள்விக்கப்பட்டது