பக்கம்:நித்தியமல்லி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


" ஆமம்மா! இன்னும் அப்பா கண் திறக்கவில்லை. நீங்க வாங்க பத்தியம் வச்சு எடுத்துக் கிட்டே வந்தி: டுங்க. ஆமா...ம்...சரி..இளைய ராஜாவை அழைச்சுக் கிட்டு வாlங்களா?...ம்...சரி...துங்குருன தம்பி? சரி: வச்சிடட்டுமாம்மா?...ம்...!" ரிஸிவரை வாங்கி வைத்தாள் மல்லிகா, உதயணனுக்குப் பயம் கவ்வவே, வலதுபுறம் திரும் பினன். அந்த வார்டின் டாக்டரை நெருங்கினன்; விவ ரத்தைச் சொன்னன். திரும்பியபோது, டாக்டர் மோகன சுந்தரம் வந்தார், கழுத்தில் பாம்பாகச் சுற்றிக் கிடந்த நாடிக் குழலுடன். - டாக்டர் வருவதை அறிந்த தமிழ்ச்சுடர் சிறிது பின்னல் நகர்ந்துகொண்டாள். யார், சுடரா?' என்ற ஆதரவான அன்புக் குரல் கேட்டு அவள் தலையை: உயர்த்தினுள். அவள் கண்களில் பிரகாசம் தழைத்தது.

செளக்கியமா, சுடர்?"

"ஆமாம்.' வந்த டாக்டரையும் வந்தணைந்த அறிமுகத்தையும்: ஒருகணம் கண்டான் உதயணன். "டாக்டர் லார்... அப்பா?...' என்று பதிட்டத்துடன் நினைவூட்ட வேண்டி யவன் ஆளுன். - . - "ஒ.ஐ ஆம் ஸ்ாரி. 1..." என்று சொல்லிக் கொண்டே டாக்டர் சோதனையில் இறங்கினர். பிறகு, "மறுபடியும் அந்த இன்ஜெக்ஷனைச் செலுத்துவோம். இன்றிரவு நல்ல பொழுதாகக் கழிந்துவிட்டால், அப்புறம். கவலையில்லை!" என்று சொல்லி, ஊசி மருந்தைச் செலுத். தினர். ஸ்ரிஞ்சு டன் திரும்பிச் சென்ருள் மருத்துவப் பணிப்பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/32&oldid=1277301" இலிருந்து மீள்விக்கப்பட்டது