பக்கம்:நித்தியமல்லி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


தமிழ்ச்சுடர் விழி விரித்துப் பார்வையிட்ட அதே நேரத்தில் உதயணனும் அவ்விருவர்களையும் நோக் கின்ை. - செங்கமலவல்லியும் மரகதத்தம்மையும் விதி'யின் இரு வேறு வகைப்பட்ட சோதனைக் கருவிகளாகத் தோன்றினர்களோ? செங்கமலவல்லியின் கொண்டையில் தளரத் தளரப் பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தன. ஆளுல் அவளோ விழிமறுகிக் செருமிக் கொண்டே யிருந்தாள்; ஆரணிப் பட்டின் ஓரங்களின் ஆருத்துயரின் வடிகால் மடை கட்டியது. மரகதத்தம்மையின் கொண்டையில் வெறுமை பொலிந்தது கட்டுப்படுத்த முயற்சி செய்யாத ஒருவகை யான பொருமலும் விம்மலும் அவளிலிருந்து ஏமாற்றத் துடனும் ஆக்ரோஷத்துடனும் வெளியேறத் துடித்தன. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்ட உதயணன் தன் அன்னையை உள்ளத் தேம்பலுடன் பார்த்தான். அப்பாவின் நிலைமையை எவ்விதத்திலும் கணிக்க முடியவில்லையே! என்ன செய்வது அம்மா? அப்பாவுக்கும் நமக்கும் தெய்வமும் டாக்டரும்தான் ర) துணை," என்று தாழ்.குரல் எடுத்து ஒதினன் அவன். செங்கமலவல்லி சேலை துணியை வாயில் திணித்த வண்ணம் விம்மிள்ை. அவளது தோளை ஆதரவுடன் தடவிக்கொடுத்தாள் மரகதத்தம்மை. அக்காட்சியைக் கண்ணுற்றதும் உதயணனின் நெஞ்சம் விம்மியது. யார் இந்த அம்மணி' என்ற பாவனையில் அவன் மரகதத்தம்மையை நோக்கினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/35&oldid=1277304" இலிருந்து மீள்விக்கப்பட்டது