பக்கம்:நித்தியமல்லி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


அவன் பார்வையைப் புரிந்து கொண்ட பாங்கில் அவனை அண்டினுள், தமிழ்ச்சுடர். 'இதுதான் என் அம்மா’ என்று தெரிவித்தாள் தமிழ்ச்சுடர். 'ஒஹோ, அப்படியா?' என்று அதிசயத்துடன் சொல்லியபடி இதழ்க்கங்களில் துயரத்தையும் மீறித் துரவப்பட்ட இளமுகையுடன் மரகதத்தம்மையை நோக் கிக் கைகளைக் குவித்தான், உதயணன். "இவர் பெயர் உதயணன் அவங்களோட பிள்ளை," என்று சன்னக் குரலில் சொன்னுள் தமிழ்ச்சுடர். அவள் கைகளை நீட்டி, ஆனந்தரங்கம் செங்கமலவல்லி ஜோடி யைச் சாடை காட்டினுள். மரகதத்தம்மைக்குப் புரிந்துவிட்டது. இனம் அறி :யாத புதிய மன நெகிழ்ச்சியுடன் அவனை நெருங்கினுள் அவள். அப்பாவுக்கு என்ன இப்படி திடுதிப்பென்று?... எனக்கு விஷயம் இவ்வளவு சீரியஸ்னு தெரியாது. அப்புறம் என் பெண் சொன்னது. புறப்படலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப உங்க அம்மா வந்து என்னைக் கையோடு அழைச்சுக்கிட்டு வந்திட்டாங்க." என்று அவளே பேச்சைத் தொடங்கி அவளே பேச்சை நிறுத்தினுள். அவள் பார்வை ஆனந்தரங்கத்தின் படுக்கையைச் சுற்றியே அலைந்திருந்தது. கண்களின் கீழ் வட்டப் பகுதிகளில் நீர்ப் பளப்பளப்பு மின்னியது. உதயணன் குனிந்த தலையுடன் குலைந்த நெஞ்சத் துடன் ஊம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் பக்கவாட்டில் தன் தந்தையின் கட்டிலை நோக் கினன் அங்கிருந்த ஆயா ஒருத்தி தன்னை அடை யாளம் காட்டி அழைத்ததை அவன் கண்டு கொள்ள வெகுநேரம் ஆகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/36&oldid=1277305" இலிருந்து மீள்விக்கப்பட்டது