பக்கம்:நித்தியமல்லி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


இன்னும் நிறைய வாங்க அனுக்கிரகம் செய்யும் படி: நான் கும்பிடக்கூடிய அனுமாரை வேண்டுகிறேன்' தன் தந்தை மனநெகிழ்வுடன் எதையும் மறைக் காமல், எதையும் காட்டாமல் பேசிய அந்த நல்ல பண்பு உதயணனுக்கு இதம் தந்தது. அப்பாவின் ஏதோ ஒரு செயல் தமிழ்ச்சுடரின் தாயை வருத்தி வந்தது. அந்தச் செய்கை காரணமாகவே, அப்பா கையில்ை அளிக்கவிருந்த பரிசிலைக்கூட தமிழ்ச்சுடர் ஏற்க மறுத்து விட்டாள்.' இம் முடிவுக்குரிய ஆரம்பம்தான் என்னவென்று அவன் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். ஆளுல் அந்த ஆசையை அவன் தன் தந்தையிடம் விரஸ்தாபிக்க முடியுமா என்ன? மரகதத்தம்மை தன்னுடைய பாழ்நெற்றியைப் பதட்டத்துடன் தடவி வேர்வைமணிகளை விலக்க எத்தனம் செய்தபோது, நெற்றிப் பொட்டின் அந்தத் தழும்பு அவளது வலதுகை துனிவிரலில் முனைப்பாகப் வட்டது. இருதயத்தின் மங்கலப் பகுதியின் தேய்ந்த இருட்குகையை விட்டு புறப்பட்ட நடுக்கம் அவளது வலது கை நுனிவிரலைச் சாடியது. நடுக்கத்தின் பரிணும வளர்ச்சி அழுகையாக உருவெடுத்தது. நடந்து வந்த பாதையின் பலதரப்பட்ட மேடுபள்ளங்களே அவன் அக்கணம் நினைத்துக் கொண் உாள். காலையில் பரிசளிப்பு விழாவில் தன் மகள் தன்னு டைய வெஞ்சினத்தை தன் சார்பாகப் பிரதிபலித்த அந்தப் பயங்கர விந்தையை அவள் எண்ணிய தருணத் திலே அவளால் ஆனந்தரங்கத்தையோ, அல்லது. உதயணனயோ தலையுயர்த்திப் பார்க்கக் கூடவிடல்லை. அதே சமயம் அருகில் சோகமே வடிவம் சமைத்து நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/39&oldid=1277308" இலிருந்து மீள்விக்கப்பட்டது