பக்கம்:நித்தியமல்லி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

. விட்டு, பின்னர் தலையைப் பின்வசமாகத் திருப்பி உட்புற மாகப் பார்த்தாள். நூல்கட்டிப் பிடித்தமாதிரி வரிசை வரிசையாகக் கிடந்த இரும்புக் கட்டில்களின் வடக்கும் பகுதியில் இருந்த ஆனந்தரங்கத்தின் பெட் அவள் பார்வைக்கு இலக்கானது ஊசி மருந்தைச் செலுத்திக் கொண்டிருந்தார் பெரிய டாக்டர் ஒருவர். அவரருகிலே உதயணன் நின்றுகொண்டிருந்தான். 'ஆ' என்ற அந்தக் குரலே வெளியிட்டவர் உதயணனின் தந்தையே என்பதை தமிழ்ச்சுடர் அனுமானம் செய்துகொண்டாள். அந்த அனுமானம் அவளுக்கு இனம்புரியாத ஒருவகைப்பட்ட அமைதியை உண்டாக்கிக் காட்டியது. பெரிய டாக்டர் வந்து, இஞ்செக்ஷன்' போட்ட காரணத்தினுல் ஊசியின் உபாதை ஆனந்தரங்கத்தை அலற வைத்திருக்கவேண் டும் என்பதும் அவளுக்குப் புரிந்தது. நிலைமையை அனு: சரித்து மருத்துவத் துறையின் உயர் அதிகாரி ஆனந்த ரங்கத்தைச் சோதிக்க வந்திருக்கிருர் என்றும், அதன் நற்பலகை ஆனந்தரங்கத்திற்கு நல்ல பலன் கிட்டிவிடு மென்றும் அவளது உள்மனம் இயம்பியது. அன்றைய இராப்பொழுது ந ல் ல .ெ பா ழு தாக விடிந்துவிட வேண்டுமே என்று அவள் காளிகாம்பிகைத் தெய்வத்தை நெஞ்சால் நினைந்து, நினைவால் கைதொழுதாள். இப் போது, அவள் அமைதி கனிய நெடுமூச் செறியலாளுள், அமைதியின் பெருமூச்சுடன் தமிழ்ச்சுடர் தன் னுடைய தாய் மரகதத் தம்மையை ஏறிட்டு நோக்கி மரகத்தம்மை அந் த த் தந்தப் பெட்டியிலே பார்வையைப் பதித்தவளாக சிந்தனை வசப்பட்டு மெய் மறந்த கோலத்துடன் நின்ற காட்சியை மேல் விட்டத் தில் சன்னமாக எரிந்துகொண்டேயிருந்த இளநீலம் பாதரசக் குழல் விளக்கொளி சுட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/44&oldid=1277312" இலிருந்து மீள்விக்கப்பட்டது