பக்கம்:நித்தியமல்லி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


நைலக்ஸ் புடவையில் தளிர்விட்டிருந்த பச்சை இலைகள் தூய வெண்ணிற ஒளியில் துலாம்பரம் கூட்டின. இரு உருவங்களே மீண்டும் அவள் நோக்கினள், ஒருவன் இளைஞன். அவன் ராஜ சேகரன்! முன்பொரு சமயம் புடவை வாங்கச் சென்ற போது, தனக்கும் தன் அன்னைக்கும் சோதனையாக அமைந்து விட்ட காமாட்சிவில்க்பாலஸின்' சின்ன முதலாளி அவ்விளைஞன் என்பதை அறிந்து கொள்ள அவளுக்குதமிழ்ச்சுடருக்கு வெகு நாழிகை பிடிக்கவில்லை. தலை முடியைக் கோதிக் கொண்டாள். முத்துவளைகள் குலுங்கின. 'அம்மா, இந்தப் பிள்ளையைத்தான் நீ முன்பே கார்த்திருக்கே! ஒருசமயம் நம்மை நம்பி உனக்கு வாங்கிய துணி மணிகளைக் கொடுத்த ஜவுளிக்கடை முதலாளி இது. இதோட அப்பா இந்த ஐயா!...நீ இலக்கியப்பரிசு வாங்கியதற்காக உன்னைப் பாராட்ட வேணும்னு நினைச்சு, அப்பாவையும் உடன் கூட்டிக்கினு வந்திருக்குது!’ என்ருள் மரகதம். "அப்படியா? ரொம்ப நன்றிங்க! பூங்கரங்களைக் கூப்பினுள் சுடர். - சுடரின் எழுத்துக்களை அவ்வப்போது படித்து ரசித்த பான்மையை வெகு தன்மையுடன் வெளியிட்டான் ராஜ சேகரன், பேச்சில் அன்பு வழிந்தது: உதடுகளில் புன் னகை வழிந்தது. அவனுக்கென்று இப்படி, ஒரு புன் னகை வசீகரமா? டெர்லின் ஸ்லாக்கின் கழுத்துப் பகு தியைத் தூக்கிவிட்டுக் கொண்டான். நீ உன் பரிட்சை முடிந்ததும் நிரம்ப எழுதம்மா! என்ரு பெரியவர் சோமநாதன். அவரது சன்னக்குரலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/61&oldid=1277327" இலிருந்து மீள்விக்கப்பட்டது