பக்கம்:நித்தியமல்லி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


ராஜசேகரனும் ஊசலாடினர். உச்சத்தில் நி ன் ற அவ்விருவரையும் அண்ணுந்து பார்த்தாள் அவள்மானசீகமாக மூக்கை மெல்ல உறிஞ்சிக் கொண்டு எழுந்தாள்: கிளாஸில் கொஞ்சம் இருந்த தண்ணிரை எடுத்து முகத்தில் தெளித்துக் கொண்டாள். புதிய உற்சாகம் பெற்ருள். தாகம் எடுத்தது. செம்பை எடுத் ப் பார்த்தாள். கலங்கலாக ஒட்டியிருந்தது நீர். மாடியை விட்டுக் கீழே வந்து தண்ணிர் குடித்தாள். அம்மா நல்ல உறக்கத்தில் இருந்ததையும் அவள் பார்த் தாள். அங்கிருந்து நகர்ந்த அவசரத்தில் மேஜை மிதிருந்த தந்தப் பெட்டி-ஆனந்தரங்கத்தின் பரிசில் பெட்டி தென்பட்டது. ஏனே அதன் மூடியை விலக் .கிள்ை, இமைவிலக்கினுள். உள்ளே கடிதமொன்று இருந்தது. முன்பின் யோசனையின்றி அதைப் பார்த்தாள். பிரித்தபடி பொழுதோடு அம்மா இக்கடிதத்துடன் வந்து தன்னிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அக் கடிதம் பற்றி எதுவுமே பிரஸ்தாபிக்காமல் போய் விட்டதையும் அவள் நினைத்துக் கொள்ளமுடிந்தது. ஆனந்தரங்கத்தின் கடிதம்:

  • அன்புள்ள மரகதம்! :

காலம் எப்படி எப்படியோ விளையாடி விட்டது நம் இருவரைப் பொறுத்த மட்டிலே! இன்றைக்கு நான் மரணத்தின் வாசலில் நிற்கிறேன். ஆகவே, உன்னிடம் ஒரு கடைசிக் கோரிக்கையாக இதை விடுக்கவே இப்படிக் கடிதம் எழுதுகிறேன். நான் இனி பிழைக்க மாட்டேன். என் மனம்,அமைதியடைவேண்டு. மென்ருல், நான் உனக்களித்த வைரநெக்லஸை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/67&oldid=1277333" இலிருந்து மீள்விக்கப்பட்டது