பக்கம்:நித்தியமல்லி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


பிரதி வாதங்களிலே குணசீலன் வல்லவர். அந்த வல்லமையை அவர் தமது மனைவியோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், கம்யூனிஸ் கொள் கை யி ன் பாலும் அவர் அனுதாபம் கொண்டுவந்தார். ஆனல், சீனர்களின் வஞ்சகச் செயலை நிதர்சனமாகக்கண்டு கொண்ட பிறகு, அவரது கொள்கைப்பிடி சற்றே தளர்ந்தது. ஆணுலும், ஒருமுறை மெரின கடற்கரையில் நடந்த இதே ஈ. எம். எஸ் பொதுக்கூடத்துக்குப் போன் விட்டு எவ்வளவு நேரம் கழித் து வீடு வந்து சேர்ந்தார்: வண்ணவில்லுக்கு வர்ணங்கள் பல. அம்மாதிரிதான் மனத்திற்கும் பல எண்ணங்கள். காலத்தின் பனி மூட்டத்தைக் குடைந்த சென்றது: மரகதத்தம்மையின் பெண் உள்ளம், அவள் ஹாலின் அமர்ந்தபடியே தலையை மேலுக்கு உயர்த்திப் பார்த் தாள். கழுத்து இறுகி வளைந்து நிமிர்ந்தது. கழுத்தில் இழைந்த ஒற்றை வடம் சுருண்டு காதின் ஒரத்தை அழுத் தியது. ஏதோ கனவின் லயிப்புடன் சங்கிலியை இழுத் துப் போட்ட வண்ணம் தலையைக் திருப்பிக் கீழே குனிந்து சங்கிலியின் மையப் பகுதியைப் பார்த்தாள். பார்த்து முடித்த துடிப்பு தளர்ந்த நேரத்தில், ஐயோ. அத்தான்!” என்று வாய்விட்டு விம்மினள். தாலிகொடுத் தவர் வாய்மூடி மெளனியாகப் புன்னகை பூத்து போட்டோவில் காட்சியளித்துக் கொண்டிருந்தார். பாவம், மரகதம் - விம்மலுக்கு நிரூபணமாக நீர் முத்துக்கள் அவளது கருங்கி நிறம் மங்கிய கன்னங்களிலே உருண்டன. நி, 5-488 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/70&oldid=1277336" இலிருந்து மீள்விக்கப்பட்டது