பக்கம்:நித்தியமல்லி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ig எழுதித் தீர்த்து சம்பளம் என்று அறுபது ரூபாய்க் காசை சுக்கான் செட்டியிடம் எண்ணி வாங்குவதில்: இருந்த சிரமம் அவருக்குத்தான் அத்துபடி. ஆகவே மழையில் நனைந்தபடி, நித்தியமல்லிச் செடிகளின் கூட்டத்துக்கு அடியில் ஒதுங்கிள்ை. அப்போது குடையும் கையுமாக, புன்னகையும் உதடுகளுமாக வந்து தோன்றின்ை ஆனந்தாங்கம். கோர்ட்டில் பத்திரம் எழுதும் தந்தையின் பிள்ளையாகத் தோன்ற வில்லை அவன். சீமான் பெற்ற .ெ ச ல் வ. மா. க த், தோன்றினன். பட்டுச் சொக்காயும் மயில்கண் ஜரிகை வேட்டியுமாக ஆள் ஜம்மென்று இருந்தான். கழுத்தில் மைனர் செயின் இருந்தது. மைனர் தானே அவன்! வந்தவன் மரகதம்! இந்தா குடை, மழையில் நீ" நனஞ்சால் உன் உடம்பு என்னத்துக்கு ஆகும்? நீ புறப்படு. நான் மழைவிட்டதும் மெள்ள வந்துக் கிறேன்”, என்று பரிவுடன் மொழிந்தான். இப் பேச்சைக் கேட்டதும், மரகதத்தின் இளஞ் சிவப்புக் கன்னங்களில் நாணக் குழைவு சிவிர்த்தது. 'நீங்கமட்டும் மழையில் நனையலாமா? கூடாது நீங்க, உங்க குடையிலே போங்க. நான் மழை நின்னவுடன் வருகிறேன்!” என்ருள். - 3. இளம்பிள்ளை கேட்பான? - . கடைசியில் அவன் வாதமே வென்றது. இளம் பிள்ளை வாதமல்லவா? அவன் இஷ்டப் படி யே அவனுடைய குடையை அவள் வாங்கிச் சென்ருள். இருவரும் ஒரே குடையில் செல்லலாமே என்ற தவிப்பு. இருவர் நெஞ்சங்களிலும் மெல்ல ஊடாடியதென்னவோ வாஸ்தவந்தான். ஆனல் அப்பிரச்சனையை இருவருமே தொட்டுப் பார்க்கத் துணியவில்லை. இந்த அணுயுகக் காதல் நாகரிகம் போலவா அப்போது இருந்தது? ஒரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/80&oldid=786657" இலிருந்து மீள்விக்கப்பட்டது