பக்கம்:நித்தியமல்லி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8T வந்து ஆனந்தரங்கத்தை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள தீர்மாணித்துச் சென்று விட்டதை அறிந்தாள். மூன்ரும் நபர் மூலமாக. மரகதம் சுடர் விளக்கானுள். இந்த நட்பை அறிந்தார் அவளது தந்தை, நீ கவலைப்படாதேம்மா, நீ பரணி நட்சத்திரம், தரணி ஆளுவேன்னு மானம்புச்சாவடி பட்டு நூல்கார பாகவதர் சொல்லியிருக்காரம்மா!... உலகத்திலே வாய்ச்சுத்தம். வாக்குச் சுத்தம் வரவர கம்மிப்பட்டுக்கிட்டு வருதம்மா. நீ கவலைப்படாதே, மரகதம்' என்று தேற்றினர். பெரியவர். . அவர் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். அவர் சொன்ன மாதிரியே அடுத்த மூன்ரும் நாள் மர கதத்தின் அழகைக் கேள்விப் பட்டு திருவாரூர்ப் பணக் காரர் ஒருவர் தம்பிள்ளைக்கு மரகதத்தைப் பெண்பார்க்க வந்து பெண்பார்த்து முடிவு செய்து விட்டுப் போனர். அந்த மாப்பிள்ளைதான் குணசீலன்! ஆனந்த ரங்கத்தின் திருமண அழைப்பு அப்போது தபாலில் வந்தது. அழைப்புக்கு நன்றி தெரிவித்து, புது மணத் தம்பதிகளின் நல்வாழ்வுக்குப் பிரார்த்தித்து. செய்தி கொடுத்தாள் மரகதம், மரகதத்தின் திருமண அழைப்பும் ஆனந்தரங்கத். துக்கு அனுப்பப்பட்டது. திருமணத்திற்கு சீதனக் காரில் வந்தான் ஆனந்தரங்கம், வந்தவர் திருமணப் பரிசாக மரகதத்துக்கு வைர நெக்லஸ் ஒன்றைப்பரிசளித். தான் ஆனல் மரகதம் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. அவன் திரும்பி விட்டான். - விவரம் அறிந்த குணசீலனிடம் நடப்பைச் சொன் ளுள் மரகதம். நான் உன் குணத்தை அறிந்துதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/82&oldid=786659" இலிருந்து மீள்விக்கப்பட்டது