பக்கம்:நித்தியமல்லி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


சரி, நீ இப்போது காப்பியைக் குடியம்மா!' என்து நினைவூட்டினுள் அன்னே. "நான் காப்பி சாப்பிட்டுவிட்டேனம்மா! அன்பர் உதயணன் காலேஜ் விட்டதும் என்னை வலுக்கட்டாயம் படுத்தி மெரின காண்டீனுக்கு அழைச்சிட்டுப்போய் போய் ஐஸ் காட்பி வாங்கிக் கொடுத்தாரம்மா!' என்று சிறுமியைப்போல வெள்ளை மனசுடன் விவரத்திை ஒப்படைத்துவிட்டு தாயின் முகத்தைப் பரிவுடன் பார்த் தாள் புத்திரி.

ைகந்நொடிப் பொழுதுக்கு மரகதத்தம்மை கண்களே மூடிக்கொண்டு நெற்றியில் வலது கைவிரல் பதித்து நின்ருள். மெளனக்கோலம்.

அந்நிலை குமாரி தமிழ்ச்சுடரைக் கசக்கிச் சாறு பிழிந்திருக்கவேண்டும்! கட்டிலில் குந்தியிருந்தவள் முள்முனை பட்ட பாவனையில் 'சடக்கென்று எழும்பிளுள். தாயை அச்சம் சூழ ஆண்டினள். "அம்மா. நான் ஒண்னும் தப்புச் செஞ்சிடலையே ஆம் மா?...உதயண் னுடன் முதல் தடவையாக காப்பி சாப்பிட்டது தப்பா அம்மா ?” என்று கலக்கத்துடன் பரிதாபமாகக் கேட்டாள். மகளின் நிலையுணர்ந்த அன்னை மரகதத்தம்மாள் மகளின் சுருளலை படிந்த முன்புற முடி இழைகளைக் கோதி விட்டபடி, தப்பில்லேன்னு உனக்கு நீயே புரிஞ்சுக் கிட்டுத்தானே அம்மா நீ அந்த உதயணனுடன் சேர்ந்து காப்பி சாப்பிட்டாய்? அது ஒன்றும் தவறு இல்லே!. எப்பவும் சொல்றதையே இப்பவும் சொல்லுகிறேன். நீ எப்போதும் எந்த நிலைமையிலேயும் ரொம்பவும் உஷாரா யிருக்கணுமம்மா!.. இந்த அவசர யுகத்திலே தாலி கழுத்துக்கு ஏறினத்தான் எதுவும் நிச்சயம். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/92&oldid=1277354" இலிருந்து மீள்விக்கப்பட்டது