பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமார் 50-ஆண்டுகளுக்கு முன்பு நா னும் என் நண்பர்களுள் ஒரு சிலரும் சேர்ந்து சென்னையிலே பாலசைவ சபை என்னும் கழகம் ஒன்றினை ஏற்படுத் திைேம். அதன் மூலமாகத்தான் என் ஆசிரியர் மணி. திருநாவுக்கரசு முதலியார் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது, அவர் அப்போது மறைமலை அடிகளாரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தபடியால் அவர் மூலமாக நானும் மறைமலை அடிகளாரிடம் தொடர்பு கொள்ளும் ஒர் ஆரிய பேற்றினைப்பெற்றேன். அப்போது அவர் நாகை: வேதாசலம் பிள்ளை என்னும் பெயருடன்தான் இருந்தார் என்றலும் அவர் அடி களாராக ஆகுதற்கு உரிய தகுதிகளையெல்லாம் உடை யவர் என்பதை அப்போதே அவருடைய தோற்றப் பொலிவு எங்களுக்குப் பளிங்குபோல் விளக்கிக் காட்டியது. குழந்தை போன்ற துய்மையான உள்ள மும் இனிமையான பேச்சும் உடைய அந்தப் பேரறிஞரைக் கண்டவுடனே நான் பெரிதும் வியப்பே அடைந்தேன்.