பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலை அடிகளும் கானும் 07 வேண்டுமானுல் இந்தக் கட்டுரையே பெரிதும் நீண்டு விடும். இக்காலச் சீர்திருத்தத்திற்கு அடிகோலியவர் நம் அடிகளாரே ஆவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும்," என்னும் கொள்கையைச் சமயச் சொற்பொழிவு களில் சிறிதும் அஞ்சாது பேசியும், ஞானசாகரம் என் னும் உயரிய திங்கள் இதழ் மூலம் பலப்பல கட்டுரை கள் எழுதியும் நிலைநாட்டியவர் நம் அடிகளே ஆவர். -- இத்தகைய சிறந்த பேரறிஞருக்கு உலக இயல்பு சிறிதும் தெரியவராது. யார் என்ன கூறினுலும் அப்படியே நம்பிவிடுவார். எ ல்லோரையும் தம்மைப் போலவே கள்ளங்கபடம் அற்றவர்களாக எண்ணி அவர் பலமுறை ஏமாறிப் போயிருக்கின் ருர். நான் அவருக்கு அறிமுகமான சம்பவத்தைக் கூறி ேைல மிகவும் சுவையாக இருக்கும். நமது அடிகளார் சென்னையிலிருந்து பல்லாவரத்துக்குப் போன சமயம், நான் சொல்லப்போகும் நிகழ்ச்சி நிகழ்ந்த சமயமாகும். அன்று ஞாயிற்றுக்கிழமை, காலை 7 அல்லது 8-மணி. இருக்கலாம். நம் அடிகளார் கையிலே ஒரு சிறு காகிதத்தோடு எங்கள் ஆசிரியர் இல்லத்திற்குத் திடீ ரென்று வந்தார். அப்போது எங்கள் ஆசிரியர் கால் சுளுக்கினல் எழுந்து நடக்க இயலாத நிலையிலே இருந் தார். அடிகளார் அதைக்கூடச் சரியாகக் கவனிக்காமல், " திருநாவுக்கரசு இந்தப் பட்டியில் உள்ள பொருள் களையெல்லாம் உடனே வாங்கிக்கொண்டு வந்து பல் லாவரத்திலுள்ள என்வீட்டில் சேர்த்துவிட வேண்டும். நான் அவசரமாகப் போகிறேன்,” என்று சொல்லி விட்டு அதற்கு வேண்டிய பணத்தையும் அவரிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். நான் அப்போது கி. - 7