பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கித்திலக் கட்டுரைகள் குக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணி யிருந்தார். தமிழர்களுக்குத் தமிழின் மீதோ தமிழ்ப் புலவர்களின் மீதோ, தமிழ் நாட்டின் மீதோ சிறிதும் கவலை இல்லையே என்று அவர் எண்ணி வருந்திய நாட் களும் உண்டு. அடிகளார் என்னைப் பலமுறை அழைத் தும் நான் அவரிடம் நெருங்கிப் பழகாமல் சிறிது தொலைவாகவே இருந்து வந்தேன். அதற்குக் காரணம் அவர்மீது எனக்கிருந்த ஒரு வகை அச்சமே ஆகும். திருவள்ளுவர் நினைவு நாள் விழாவுக்காகவும், தமிழர் திருமண மாநாட்டுக்காகவும் நான் சென்றிருந்தபோது, மரணத்தின் பின் மனிதர் நிலையைக் குறித்தும் வட மொழியினுல் தமிழ் கெட்டு அழிவதைக் குறித்தும் மிக விரிவாக என்னிடம் பேசினர். அத்தகைய ஓர் பேரறி ஞர், சிந்தனைச் சிற்பி, செந்தமிழ்க்கடல், நடமாடும் கலைக்களஞ்சியம் இவ்வுலகை விட்டு மறையும் தறு வாயிலேதான் நான் இறுதியாகச் சென்றேன். அப் போது நான் அவருடைய கையைப் பிடித்தேன். பேச்சிழந்திருந்த அந்த நிலையிலும் அவர் தம் கையில்ை இறுகப் பிடித்துக்கொண்டார். அடிக்ளார் மறைந்த போது அந்தப் பல்லவபுரமே ஒளியிழந்து காணப்பட்டது. புலவர்கள் எல்லாம் அழுதனர் ; கண்ணிர் விட்டுக் கதறினர். தாய்மார்களும் குழந்தை களும் தேம்பித் தேம்பி அழுதனர். அந்த நிலையில் என் கல்நெஞ்சமும் கரைந்து விட்டது. எத்தனையோ அறிஞர்களை நம் தமிழ் மக்கள் இழந்திருக்கின்ருர்கள். இருந்தாலும் பிறகு தோன்றிய மாபெரும் புலவர்கள் அந்த இழப்பை ஈடுசெய்து விட்டனர். நம் மறைமலை அடிகளோ அத்தகையவரல்லர். அவருடைய இடத்தை