பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாப் ெ ாருளும் இதன்பால் * RIT 7 சொல்லிவிட்டார் என்றே நிலைநாட்டல் உங்கள் விருப்பமோ' என்று அவர் எங்கள் ஆசிரியரை வின விஞர் H 'அஃது என் கருத்து அன்று. வள்ளுவர் இயற் றிய இந்நூலை அகராதியைப் போன்ருே நிகண்டைப் போன்ருே நான் சிறிதும் எண்ணவேயில்லை. மாண வர்களுக்கு வகுப்பில் எடுத்துக் கூறியதை ஒரு விளை யாட்டாகவே கொள்ளுதல் வேண்டும். அவர்களுக்கு நினைவாற்றலையும் சொல்லாற்றலையும் ஊக்குவித்தற் காகவே அவ்வாறு கூறினேன்” என்ருர், அப்படியானுல் "மதுரைத் தமிழ் நாகனர் பாட்டுக்கு நீங்கள் எவ்விதம் பொருள் கண்டிருக்கின்றீர்கள் ?” என்று அவர் வினவினர். அதற்கு எங்கள் ஆசிரியர் மணி திருநாவுக்கரசர் கீழ் வருமாறு விடையணித்தார் ; 'எல்லாப் பொருள்களும் இதன்பால் உள” என்பதற்கு உலகத்தில் உள்ள எல்லாப் பொருள் களும் என்பது கருத்தன்று. மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாச் செய்திகளைக் குறித்தும் திருக் குறளில் வள்ளுவர் சொல்லியிருக்கின்ருர் என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும். "இதன்பால் இல் லாத எப்பொருளும் இல்லையால்” என்பதற்கும் திருக் குறளில் சொல்லப்பெருத எப்பொருளும் வேறு எந்த நூல்களிலும் இல்லை என்பதும் மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையாத செய்திகளையே குறிக்கும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் இந்த நான்கினை யும் திருவள்ளுவர் மூன்று பாலில் அடக்கிக் கூறியிருக் கின்ருர் என்று அறிஞர்கள் பலரும் கூறும் கருத்தே