பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்கால வருணனை 11. திட்டுகளின் அருகே வர, அவற்றின் வருகையை நோக்கி வாடியிருந்த பைங்காற்கொக்குகளும், செவ்வரி நாரைகளும் ஆங்காங்கே இருந்து, அவற்றைப் பிடித் துத் தின் ன லாயின. " நீர் நிறைந்த அகன்ற வயல்களில் செழுமை யுடன் வளர்ந்திருந்த நெற்கதிர்கள் மழையினுல் தலை வணங்கி நின்றன. பருந்துயர் ந்த கமுக மரங்களின் குலைகள் உருண்டு, திரண்ட பசுங்காய்களுடன் கண் களுக்கு அழகு தந்து நின்றன. மன மிகுந்த மலர் களைக் கொண்டிருந்த அகன்ற சோலைகள், மழையின் மிகுதியால் பூக்கள் உதிரவும் நீர்த் துளிகள் துளிர்க் கவும் நின்றன. " இருபுறங்களிலும் மாட மாளிகைள் ஓங்கி விளங்க, இடையே ஆறு போன்று அகன்றிருந்த நீண்ட வீதிகளில், இறுகிய தோளும் முறுக்கேறிய உடலும் பெற்ற மிலேச்சர். கள்ளுண்டு மகிழ்ந்து, சிறு துாறலுக்கு அஞ்சாராய்த் திரியலாயினர். 'மழையில்ை பொழுதறிய இயலாத மகளிர், தட்டில் இருந்த பிச்சிப் பூக்கள் மலர்ந்ததால் மாலைப் பொழுதாயினமை உணர்ந்து நெல்லையும் மலரையும் து.ாவித் தம் இல்லுறை தெய்வத்தை வணங்கலாயினர். வீட்டில் வளரும் புருக்கள், மழையில்ை இரவு பகல் அறியாது, இரையுண்ணவும் விரும்பாது, பறத்தலும் தவிர்த்துக் கால் மாறி நின்று காலங்கழித்தன. ' காவலோடு கூடிய பெரிய மாளிகைகளிற். குற்றேவல்புரியும் இளைஞர், கரிய சாத்தம்மியிலே கத்துாரி முதலிய வாசனைக் கலவையினை அரைக்க வட