பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கித்திலக் கட்டுரைகள் துயில்வோன், மந்தன், தொன்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன், தறுகணன் பாவி படிறன் ’’ ஆகிய இன்னேர்க்கு ஆசிரியர் பகரார் நூலே என்று சூத்திரம் செய்தனர். ஒருவன் தான் கற்றவைகளை மறந்து விட்டாலும் மறுபடியும் வருந்திக் கற்று உணர்ந்து கொள்ளலாம். ஆளுல் ஒழுக்கத்திலிருந்து ஒருவன் தவறில்ை அவ ல்ை மீண்டும் அந்த நற்பெயரைப் பெற இயலாது என்று வள்ளுவர் ஒழுக்கத்தின் உயர்வைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். ஆதலால் மாணவர்கள் அத்தகைய ஒழுக்க நெறியில் நின்று அதனைத் தம் உயிரினும் சிறந்ததாகக் கருதுதல் வேண்டும். பாடங்கேட்க விழையும் மாணவன் முதலில் தன் ஆசிரியரிடம் பெருமதிப்பு வைத்தல் வேண்டும். பாடங் கேட்கும் முறையினைப் பவணந்தியார் மிக அழகாக விளக்கிக் கூறுகின்ருர்.

  • கோடன் மரபே கடறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடல் மூனியான் குனத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து இருஎன இருந்து சொல் எனச் சொல்லிப்

பருகுவன் அன்ன ஆர் வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச் செவிவா யாக கெஞ்சு களனுகக் கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப் ங்

போ எனப் போதல் என் மஞர் புலவர் - இது பழங்காலத்திய மிகவும் பிற்போக்கான ஒரு முறை என்று மாணவன் சிறிதும் எண்ணுதல்கூடாது.