பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் நெறி II) பொறி வாங்கியும் தாம் எழுதிய அரிய கட்டுரைகளை யெல்லாம் தாமே அச்சடித்து வெளியிட்டார். அவர் தம் நூல்கள் எல்லாம் என்றும் அழியாத ஆராய்ச்சி நூல்களாகச் சிறந்து விளங்குகின்றன. இத்தகைய அரிய ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட வேண்டும் என்பதே அவர் தம் குறிக்கோள். ஆங் கிலத்திலும், தமிழிலும், பிற மொழிகளிலும் உள்ள மிகவும் அருமையான நூல்களையெல்லாம் ஆயிரக் கணக்கில் விலை கொடுத்து வாங்கி இரவும் பகலும் ஓய்வின்றிப் படித்து நம் நாட்டுக்கு அரிய பெரிய தொண்டுகளைப் புரிந்த அவரைப்போல் எவராலும் செய்து காட்ட இயலாது. அவர் ஒவ்வொன்றுக் கும் திட்டம் வகுத்துக் கொண்டு உழைத்தவர் ; உயரிய தனித்தமிழில் அரிய நூல்களையெல்லாம் எழுதி வெளியிட்டவர். நீங்கள் எவ்விதம் இவ்வளவு சிறந்த புலமையை அடைந்தீர்கள் ?' என்று ஒருமுறை நான் அவரைக் கேட்டபோது “ சிறந்தவைகள் என்று எனக்குத் தோன்றிய நூல்களையெல்லாம் நான் மனப் பாடம் செய்துவிட்டேன். ஆங்கிலம் தமிழ் ஒவ்வொன் றிலும் நான் இவ்விதமே மனப்பாடம் செய்தேன் 11 என்ருர், ஆதலால் மாணவ மணிகளே ! நீங்கள் உங்கள் பாடங்களை மனப்பாடம் செய்தற்குச் சிறிதும் தயங்காதீர்கள். டாக்டர் ஏ. எல். முதலியார், ஏ. ஆர் முதலியார் என்று பேச்சிலும் எழுத்திலும் பேரும் புகழும் பெற்று விளங்கும் இரு பேரறிஞர் களும் சிறந்த ஆங்கிலச் செய்யுள்களை யெல்லாம் நெட்டுருச் செய்தவர்களேயாவர். நம் சென்னை மாநிலக் கல்வித்துறைத் தலைவராய நெ. து. சுந்தர