பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்கால வாழ்க்கையும் தற்கால வாழ்க்கையும் 37 தலைவர் : நண்பர்களே ! அடுத்து இதனை மறுத் துப் பேச விரும்புவோர் தம் கருத்தினை விளக்கிக் கூறு மாறு அழைக்கின்றேன். திருமாவளவன் : பேரன்பு மிக்க தலைவர் அவர் களே ! தோழர்களே ! மனிதன் சந்திர மண் டலத்திற்குப் பறந்து செல்ல முயன்று கொண்டிருக்கும் இந்த விஞ் ஞான காலத்திலே கற்றுணர்ந்த கலையரசியார் முற் கால மக்களின் வாழ்க்கை முறையே சிறந்தது எனப் பேசியது விந்தையே. பிறர் நம்மைப் பழிக்கும் படியாக வாழ்தல் கூடாது ; நம்மிடம் உள்ள தைப் பிறர்க்கும் பகுத்துண்டு வாழ வேண்டும் என்று வள்ளுவர் கூறியதை நானும் முழு மனத்தோடு ஒத்துக் கொள்கின்றேன். ஆல்ை மன் னன் ஒருவனே எல்லோரையும் அ! க்கி ஆண்டு வந்த அக்காலத்தில் உழைப்பவர்க்கு உரிமை இருந்திருக் குமா ? உழைப்பவர் சிலர் ; உண்டு வாழ்வோர் பலர் என்ற நிலைதானே இருந்திருக்க முடியும் ? ஆளுல் இன்ருே அந்நிலை மாறி மக்களே இந்நாட்டு மன்னர் . என்ற முறை தோன்றி உள்ளது. உழைப்பவர்க்கு உரிமை பெருகியுள்ளது ! உண்மையாக நோக்கில்ை வள்ளுவர் கூறிய பகுத்துண்டு வாழும் முறை இக் காலத்தில் தான் நடைமுறையில் உள்ளது என்பது விளங்கும். மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்று சொல்லி விட்டால் போதுமா ? எது இயற்கை, எது செயற்கை ? என்று சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். ஆதிகா ல மனிதன் காய்கனிகளையும் பச்சை இறைச்சி யையும் உண்டு வாழ்ந்தான். பின்னர், தன் அறிவு