பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() நித்திலக் கட்டுரைகள் திருக்க முடியுமா? இருதயத்தையும் அறுவைச் சிகிச்சை மூலம் நோய் நீக்கிக் குணப்படுத்த முடியும் என்று இக் கால விஞ்ஞானிகள் விளக்கிக் காட்டியுள்ளனர். அவர் கள் இத்துறையில் செய்து வரும் மற்றும் பல முயற்சி கள் வெற்றி பெற்ருல் மக்கள் கலையரசியார் கூறியது போல் நீண்டகாலம் இன்பமாக வாழமுடியும் என்பது என் நம்பிக்கை. ஆதலால் இக்காலம், மனித வாழ்வி லேயே மிக உயர்ந்த பொற்காலம் என்று கூறி என் உரையை முடிக்கின்றேன். தலைவர் ; நண்பர்களே இருவர் தம் உரைகளை யும் கேட்டீர்கள். உங்களில் யாராவது அவர்கள் கூறிய கருத்துக்களை ஒட்டியோ வெட்டியோ பேச விரும்பினுல் பேசுமாறு அழைக்கின்றேன். மணிவண்ணன்: பேரன்புடையவர்களே! வணக் கம் மிகப் பல. நண்பர் திருமாவளவன் விஞ்ஞானப் பித்தினுல் பழமையை எள்ளி உரைத்துப் புதுமையை வரவேற்றுப் பேசினர் ; இக்கால வா ழ்க்கையே சிறந் தது என்பதற்கு விஞ்ஞானத்தினுல் ஏற்பட்டுள்ள வசதி களே அடுக்கிக் காட்டிஞரேயன்றி மக்கள் வாழ்க்கை இக் காலத்தில் அமைதியும் இன்பமும் உடையதாக இருக் கின்றதா என்று எடுத்து விளக்கத் தவறி விட்டார். இயற்கை செயற்கை என்பதற்கு அவர் கூறிய விளக்கமும் நகைப்பையே விளைவிக்கிறது. நம் நாட்டில் உள்ளவர்கள் அரிசியை உணவாக உண்டு, நம் நாட் டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பப் பருத்தி ஆடை உடுத்து வாழ்தல் இயற்கையோடு இயைந்த வாழ்வா கும். அயல்நாட்டு உணவு, உடை இவைகளை மேற் கொள்வது ஆடம்பரத்துக்காகவே அல்லாமல்