பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கித்திலக் கட்டுரைகள் சின்னமாக விளங்குகின்றது அச்சபை. அங்ங்னம் இருக்க இக்கால மக்களிடம் மனிதப் பண்பாடு இல்லை என்று கூறியதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன். இறுதியாக ஒன்று கூறி முடிக்கின்றேன். பழங் கால வாழ்க்கை முறையைப் போற்றிப் புகழ்ந்த இவர் கள் பழங்கால முறைப்படி உண்டு உடுத்தி வாழ முன் வருவார்களா ? என்று கேட்க விரும்புகின்றேன். மக்கள் அறிவு வளர்ச்சி இல்லாமல் வாழ்ந்த காலத்தில் தங்கள் தேவைக்கு ஏற்ற எளிய பொருள்களைக் கொண்டு வாழ்ந்தார்கள் என்ருல் அறிவு வளர்ச்சி பெற்றுப் பற்பல வசதிகளும் பெருகியுள்ள இக்காலத் தில் அப்பழங்கால வாழ்வு தான் சிறந்தது என்று கூறு வது அறிவுடைமையாமோ ? அந்தப் பழங்கால வாழ்க் கையே இன்ப வாழ்க்கையாக இருந்தால் மக்கள் ஏன் அதை விட்டுப் புதுப்புது நாகரிக நிலையை விரும்பி ஏற்ருர்கள் ? நம் கலையரசியார் கொள்கையைக் கண்டிக்க இந்த ஒன்றே போதும் என்று சொல்லி என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன். தலைவர் : அறிவு நலம் சிறந்தொளிரும் நண்பர் களே ! உங்கள் அரிய சொற் பொழிவுகளைக் கேட்டுப் பெரு மகிழ்வு கொள்கின்றேன். ஒவ்வொருவரும் உங் கள் எண்ணத்தை நிலைநாட்டக் கூடிய கருத்துக்களை எடுத்துரைத்தீர்கள். முடிவு கூறவேண்டிய பொறுப்பு என்னைச் சார்ந்துள்ளது. உங்கள் சொற்பொழிவுகளைக் கேட்ட எனக்கு இருவித வாழ்க்கை முறைகளும் சிறந் தன என்றே தோன்றுகின்றன. பழமை இல்லாமல் புதுமை இல்லை. இன்றைய புதுமைகள் யாவும் - பழமையிலிருந்து தோன்றி வளர்ந்தனவேயாம்.