பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I, M கித்திலக் கட்டுரைகள் கொள்ளவே விரும்புவார் ; எங்களைப் போன்ற இளைஞர்கள் வந்தாலும் தாம் எழுதிய பாடப் புத்தகங் களைக் குறித்து எங்கள் எண்ணங்களை அறிய விரும்பு வார் ; சிறு குழந்தைகள் வந்தால்கூட அந்தக் குழந்தைகளிடம் 'ஆ இது ஒரு அத்திப்பழம் ” என்னும் பாட்டை இராகத்தோடு பாடி அவர்களை மகிழ்விப்பார். அந்தப் பேரறிஞரிடம் நான் அறிந்துகொண்ட அரிய செய்திகளையெல்லாம் இங்கே சொல்ல என்னுல் இய லாது. அவர் கோபமாகப் பேசி நான் பார்த்ததே யில்லை. மற்றவர்கள் எல்லாம் கேட்பதற்கு அஞ்சிக் கொண்டிருந்த கேள்விகளை எல்லாம் நான் அவரிடம் சாதாரணமாகக் கேட்டு விடுவேன். நான் ஒருநாள் அவரைப் பார்த்து, ' நீங்கள் பிற புலவர்களைப் போல அந்தாதி, கலம்பகம் முதலிய நூல் களையெல்லாம் இயற்ருது ஏன் பாடபுத்தகங்களை எழுத ஆரம்பித்தீர்கள் ?” என்று கேட்டேன். அப். போது அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்து பிறகு சொல்ல ஆரம்பித்தார். "நம் நாட்டிலே என் ஜனக் காட்டிலும் பேரறிஞர்கள் புராணம் இதிகாசம் கலம்பகம் முதலியவைகளையெல்லாம் வேண்டிய அள வுக்குச் செய்து வைத்து விட்டார்கள். நானும் என் னுடைய அறிவுக்கு ஏற்றவகையில் ஏதாவது நம் முடைய தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டு மென்று எண்ணினேன். அவ்விதம் எண்ணிப் பார்க்கும்போது ஆரம்பக் கல்வி மாணவர்கட்கு நல்ல வகையிலே ஒழுங் காக என்னுல் நூல்கள் எழுதமுடியும் என்று எனக்குத் தோன்றியது.