பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. வுடன் நான் 59. மகிழ்வதை என் வழக்கமாகக் கொண்டிருந்தேன். இளவயதிலேயே அவருடைய பேச்சு வன்மை எல் லோருடைய உள்ளத்தையும் கவர்ந்து விட்டது. விபின் சந்திரபாலர், அன்னி பெஸன்ட் அம்மையார் ஆகியோரின் வீரம் செறிந்த சொற்பொழிவுகளைக் கேட்ட திரு வி. க. அவர்களுக்கு விடுதலை வேட்கை மிகுந்தது. தம் குடும்பத்தினர் வறுமையில் உழல் வதைச் சிறிதுகூட எண்ணிப் பார்க்காமல் தாம் அலுவல் பார்த்து வந்த வெள்ளையர் வாணிக நிலைய மாகிய ஸ்பென் ஸர் கம்பெனியினின்றும் விலகிக் கொண்டார். விடுதலை வேட்கை ஒரு புறமும், தமிழார் வம் மற்ருெரு புறமும், தொழிலாளர் நலன் பிறிதோர் புறமும் திரு வி. க. அவர்களை ஆட்கொண்டன. மகாவித்வான் தணிகாசல முதலியார், மறைமலை அடிகளார், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமி கள் ஆகியோர் தம் தொடர்பால் தமிழ்ப் பெரி யாரின் தமிழறிவும், சைவப் பற்றும் பிறை மதியென வளர்ந்தன. திரு. வி. க. அவர்கள் துவக்கத்திலேயே வெகு அழகாகவும் அருமையாகவும் பல்சுவைகளும் நனி சொட்டச் சொட்டச் சொற்பொழிவாற்றி யிருக்கின்ருர், அவர்தம் இளமைப் பருவத்தில் பல நண்பர்களோடு இணைந்து நடத்திவந்த மன்றங்கள் இன்றும் நல்ல நிலையில் இருந்து வருகின்றன. அந்த நாட்களில் அம் மன்றங்களில் பல சிறந்த அறிஞர்களெல்லாம் சொற்பொழிவாற்றும்படி செய்தவர் நம் தமிழ்ப் பெரியாரே ஆவர். திரு. வி. க. அவர்கள் ஒரு நல்ல மேடைப் பேச்சாளராக மட்டுமின்றி உரையாடல்